நீதி அரசர்கள் ஆன்லைன் மூலமாக அவர்களது வேலையை பார்க்கிறார்கள். ஆனால், பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் எப்படி ஒரே அறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியும் என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு நாளையொட்டி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்;- அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் தமிர்நாடு என பெயரிட்டார்கள். இங்குள்ள திராவிட கட்சிகள் அண்ணா தமிழ்நாடு என பெயரிட்ட நாளை கொண்டாட வேண்டும் எனக் கூறுகிறார்கள். பிள்ளை பிறந்த நாளைத்தான் கொண்டாடுவார்களே தவிர பெயர் வைத்த நாளை கொண்டாட மாட்டார்கள். 

நாடு முழுவதும் மதம் பிடித்து அலைகிறது. அவ்வாறு மதம் பிடித்து அலைந்தால் நாடு நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது. மக்களின் பிரச்சனையே பாஜக தான். முருகன் பிறந்தநாளுக்கு விடுமுறை கேட்டபோது எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. பாஜகவுக்கு இப்போது அரசியலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. 

ஆகையால், தமிழகத்தில் வேல் யாத்திரை மூலமாக இடம்பிடிக்க பாஜக நினைக்கிறது. ஆனால் அந்த வேல்-ஐ வைத்தே அரசியல் களத்தில் பாஜகவை வீழ்த்துவோம். என்னதான் வேல் ஐ வைத்துக்கொண்டு பாஜக அரோகரா போட்டாலும் முருகா என்றால் மக்களுக்கு சீமான் முகமே நினைவுக்கு வரும் என்றார். மேலும், நீதி அரசர்கள் நீதிமன்றங்களுக்கு வராமலேயே ஆன்லைன் மூலம் தீர்ப்பளிக்கின்றனர். ஆனால், பள்ளி மாணவர்கள் மட்டும் எப்படி ஒரே அறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.