விஞ்ஞான பூர்வமான எதையும் ஏற்க மறுக்கும் பகுத்தறிவு வியாதி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் சூரிய கிரணகத்தின்போது உணவருந்தக் கூடாது என்ற மூட நம்பிக்கையை முறியடிக்கும் நிகழ்ச்சியை திராவிடர்கழகம் நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு தி.க தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.

இதனால் கடுப்பான பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் ஈ.வெ.ரா. விடுதலை பத்திரிகை, 1967 க்கு முன்பாக சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகியோர் பேசிய பேச்சுக்கள் ஆகியவற்றை இது போல் ஆதாரத்துடன் வெளியிட்டால் யாரும் நம்மை கண்டிக்க முடியாது. புரிஞ்சா சரி.

விஞ்ஞான பூர்வமான எதையும் ஏற்க மறுக்கும் பகுத்தறிவு வியாதி. மாற்று மத நம்பிக்கைகளை இவர் கொச்சை படுத்தியது உண்டா. முழு இந்து விரோதி. முரசொலி பஞ்சமி நிலத்தை மறக்கவில்லை. சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மதத்தின்அடிப்படையில் தீவிரவாதம் செய்துகொண்டும், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டும், மதத்தின் அடிப்படையில் வேலையில் இடஒதுக்கீடு பெற்றுக்கொண்டும், மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி பெற்றுக்கொண்டும் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.