Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசை நோண்டி நுங்கெடுக்கும் வீரமணி... அப்படி செஞ்சே ஆகணும்னு ஒட்டாரம் பிடிக்க காரணமென்ன?

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்க வேண்டிய ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு மறுப்பது ஏன்? உண்மையான எண்ணிக்கை தெரிந்தால், இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் கேட்கும் நிலை ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தாலா? சமுகநீதியாளர்கள் ஒன்று கி.வீரமணி கூறியுள்ளார்.

Veeramani call protest against bjp
Author
Chennai, First Published Aug 8, 2019, 4:25 PM IST

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்க வேண்டிய ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு மறுப்பது ஏன்? உண்மையான எண்ணிக்கை தெரிந்தால், இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் கேட்கும் நிலை ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தாலா? சமுகநீதியாளர்கள் ஒன்று கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கணக்குதான் எடுக்கப்படும்; பிற்படுத்தப் பட்டோரில் அடங்கியுள்ள ஜாதிவாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதற்குச் சொல்லப்படும் காரணம்தான் விசித்திரமானது. பிற்படுத்தப்பட்டோரில் 40 லட்சத்துக்கும் மேலான ஜாதிகள் இருப்பதாகவும், இந்த நிலையில் அவற்றைத் தொகுப்பது கடினமானது என்றும் நொண்டிச் சமாதானம் கூறப்படுகிறது.

1872 ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு என்ற நடைமுறை எடுக்கப்பட்டுதானே வந்தது. அப்படி எடுக்கவேண்டியது சட்டப்படியான நிலையும்கூட!பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும்போது, அதன் அடிப்படையில் ஜாதி கணக்கெடுப்பு எடுப்பதில் என்ன சங்கடம் - என்ன இடர்ப்பாடு?

ஏற்கெனவே இருந்த ஜாதிகள்தானே - புதிதாக ஜாதிகள் குட்டிப் போட்டுவிட்ட னவா?புளுகினாலும் பொருத்தமாகப் புளுக வேண்டாமா? உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று அவசர அவசரமாக அறிவித்ததே அது எதன் அடிப்படையில்?

ஜாதிபற்றிய புள்ளி விவரம் இல்லாமல் இருந்தால்தான் இதுபோல அறிவிப்புகளை உயர்ஜாதி மனப்பான்மையோடு செய் வதற்கு வசதியாக இருக்கிறது என்று மத்திய பி.ஜே.பி. அரசு கருதுகிறது என்று நினைக்க இடம் இருக்கிறது.

ஜாதிகளை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். பின் அதற்கு எந்த அவசியமும் இருக்காது. அதை விட்டுவிட்டு இந்த மனப்போக்கு திட்டமிட்டு அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் இப்படி அநீதியா?

மற்றொரு முக்கிய காரணம், தற்போது மத்திய அரசு துறைகளிலும், கல்வி நிலை யங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 27 விழுக்காடு இடங்கள்தான் அளிக்கப்படுகின்றன (இதைக்கூட முழு மையாகப் பூர்த்தி செய்யவில்லை என்பது வேறு விடயம்).

பிற்படுத்தப்பட்டோர்களின் எண் ணிக்கை மக்கள் தொகையில் 75 விழுக் காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், இந்த 27 விழுக்காடுக்குப் பதிலாக அதிக விழுக் காட்டில் இட ஒதுக்கீடு கேட்டு  வலியுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் மூண்டு எழும் என்ற அச்சத்தின் காரண மாகத்தான், பிற்படுத்தப்பட்டோர் ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கின் றனர் என்பதுதான் உண்மை.

ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இட ஒதுக்கீட்டிலும், பொரு ளாதார அளவுகோலைத் திணித்து உயர் ஜாதியினருக்குப் பட்டுக்கம்பளம் விரிக்கும் மத்திய பி.ஜே.பி. அரசு , பிற்படுத்தப் பட்டோரின் உண்மையான மக்கள் தொகை வெளிவருமேயானால், இட ஒதுக்கீட்டுத் திசையில் மேலும் வலிமையான கோரிக்கை கிளர்ந்து எழுந்துவிடும் என்று கருதியே, திட்டமிட்ட வகையில் பிற்படுத்தப்பட் டோரின் ஜாதி வாரி கணக்கை எடுப்பதிலிருந்து விலகி நிற்கிறது. பார்ப்பன உயர்ஜாதி அமைப்பான பிஜேபி. ஆட்சி யின் இந்தத் தந்திரத்தை, சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.

சமுகநீதியில் நம்பிக்கை உள்ள அனைத் துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து பார்ப்பன பி.ஜே.பி. ஆட்சியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான் பி.ஜே.பி.யின் கொள்கை என்றால், ஜாதியை முற்றிலும் ஒழிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற முன்வரட்டுமே - அதற்குத் தயாரா என்று சவால் விட்டே கேட்கிறோம். அப்படி முன்வந்தால் அதனை முதலில் வரவேற்பது திராவிடர் கழகமாகத்தானிருக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமுகநீதிக் கொள்கையில் மாறுபாடான கொள்கை உடைய பி.ஜே.பி. அரசு நாணய மான முறையில் இல்லாமல் குறுக்கு வழியில் அதனை ஒழிக்க, ஒவ்வொரு வகையிலும், செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுப்பதாகும்.

சமுகநீதியாளர்களே, ஒன்று சேர்வீர் - ஜாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான உண்மைப்  புள்ளி விவரமும் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது - அதன் இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது.

இதனைப் புரிந்துகொண்டு இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் அளிக்கப் பட வேண்டும் என்ற உரத்த குரல் கொடுக்கவும், வீதிக்கு வந்து போராடுவோம் என்று வாரீர்! வாரீர்!! என்று அழைக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரத்த குரல் கொடுக்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கக் கூடாது; ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலி யுறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்து கிறோம். இது சாதாரண பிரச்சினையல்ல - முன்னுரிமை கொடுத்து முன்கையை நீட்ட வேண்டிய பிரச்சினை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios