தினகரன் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்துவிட்டார் அண்ணாவும் திராவிடமும் இல்லாத டிடிவி.தினகரன் அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

யார் இந்த நாஞ்சில் சம்பத்? அவருடைய அரசியல் பயணம் எப்படி?

தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதி. திராவிடம் முற்றிய சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்காவிளை என்ற ஊரில் பாஸ்கரன், கோமதி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். சிறு வயதிலேயே பேச்சில் சிறந்து விளங்கிய இவர் திமுகவில் தலைமைக் கழக பேச்சாளராக விளங்கினார்.

கருணாநிதியால் வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும் வெளியேறி வைகோவின் தளபதியாக திகழ்ந்ததவர். கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்ட நாஞ்சிலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. மதிமுகவில் இருந்த போது வைகோவின் போர்வாள் மகுடம் சூட்டப்பட்டவர்.

ம.தி.மு.கவை விட்டு திமுகவில் மீண்டும் ஐக்கியமான அந்த நேரத்தில், கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. அதுபோலத்தான் ம.தி.மு.க. அதை விட்டுப் போனால் அவமரியாதை என்பதை வரலாறு கற்ப்பிக்கும் என்றார்.

ராமாயணத்தில் வரும் அனுமன் தனது நெஞ்சில் ராமன் இருப்பதை பிளந்து காட்டியது போல, எனது ஒரே தலைவன் வைகோ தான். அவரைத் தவிர என் நெஞ்சில் யாரும் இல்லை என மார்பை பிளந்து காட்டவும் தயாராகவும் இருக்கிறேன் என கர்ஜித்த நாஞ்சில் சம்பத்

மதிமுகவிலிருந்து திடீரென வெளியேறினார். அரசியல் நமக்கு வேண்டாம் என ஒதுங்கி இருந்த நாஞ்சிலை 2012ம் ஆண்டு அதிமுகவிற்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றார் ஜெயலலிதா. அதோடு ஒரு இன்னோவாகாரையும் பரிசளித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முதன்மை பேச்சாளராக நியமித்து கவுரவப் படுத்தினார்.

ஜெயலலிதா மறைவால் ஒதுங்கியிருந்த நாஞ்சிலை சசிகலாவின் கணவர் நடராஜன் நேரடியாக வீட்டிற்க்கே சென்று நீங்கள் எல்லோரும் இருக்கும் தைரியத்தில் தான் சசிகலா கட்சிப் பொறுப்பிற்கு வரப்போகிறார்.

திராவிடக் கட்சியில் தலை சிறந்த பேச்சாளரான நீங்கள் எங்களோடு இல்லாததை எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எதுவாக இருந்தாலும் நீங்கள் எங்களோடு இருக்கவேண்டும் என திரும்பவும் அதிமுகவிற்கு அழைத்துவந்தார் நடராஜன். இதனைத் தொடர்ந்து சசிகலாவின் விசுவாசியாக செயல்பட்டு வந்தார். சசிகலா சிறை சென்ற பின்னர், தினகரனுக்கு நிழலாக இருந்து வந்தார்.

அவர் ஒரு புனிதர் தினகரனை கண்மூடித்தனமாக வார்த்தைகளால் அர்ச்சனை செய்த நாஞ்சில்!

கடந்த ஆண்டு அதிமுகவில் துணைப்பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற தினகரனை திகட்ட திகட்ட திராவிடம் பேசிய நாஞ்சில் சம்பாத்த அதே வாயால் தினகரனை புகழ்ந்து தள்ளினார். பேட்டியாகட்டும், சமூகவளைதலங்களில் போதும் பதிவாகட்டும் தினகரனை யாரும் அப்படி புகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

இதோ அவரது முகநூல் பதிவில் சில பதிவு... தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாய் தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டார். அவருக்காக நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று தினகரனை "வராது வந்த மாமணி"

"சிறையில் இருந்தாலும் சிந்தையெல்லாம் சிம்மாசனசம் போட்டு இருக்கின்ற" கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்களுக்கும், வராது வந்த மாமணியாம் கழக துணை பொதுச் செயலாளர் எங்கள் திசையெல்லாம் தேன்சொரியும்" டிடிவி தினகரனுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன் என தினகரனுக்கு வார்த்தைகளால் பெருமை சேர்த்தார்.

இதனையடுத்து மற்றொரு பதிவில், திராவிட இயக்கத்தின் திருப்பத்திற்கும், விருப்பத்திற்கும் உரிய வரலாற்று சிறப்பு மிகுந்த மயிலை மாங்கொல்லையில் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நேற்று ஆற்றிய உரை கழக தோழர்களுக்கும் அம்மாவின் பக்தர்களுக்கும் களிப்பையும் கரைகாணா உற்சாகத்தையும் தந்து விட்டது.

மதிப்பிற்குரிய டிடிவி தினகரன் அவர்கள் வீரன் , தின்னியன், தின்தோள் மறவன் என்பதை நிரூபித்து விட்டார். இவ்வாறு வீரன், தின்னியன், தின்தோள் மறவன் என வார்த்தை ஜாலங்களால் கர்ஜித்தார்.

இதோல கடந்த ஜனவரி மாதம் போட்ட ஒரு பதிவில், கிரிக்கெட்டை விரும்புவது போல் தினகரனை இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

தினகரனுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடந்தது. ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் கிடையாது. ஆனாலும் இளைஞர்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள்.

அதேபோல் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தினகரனை இளைஞர்கள் விரும்புகிறார்கள் என அதகளம் பண்ணார்.இப்படி போய் கொண்டிருக்கும் நெஞ்சில் சம்பத்தின் தீந்தமிழ்  திராவிட பேச்சை நம்மிடமிருந்து பிரிக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில். கடந்த 15ம் தேதி

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய அமைப்பை  தொடங்கினார் தினகரன்.

அணியின் பெயரில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அண்ணாவும் திராவிடமும் இல்லாத அணியில் இருக்க விருப்பமில்லை என்பதால் டிடிவி. தினகரன் அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார்.

தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவர் அண்ணா, மனிதனை மனிதனாக எண்ணியதன் பெயர் திராவிடம். திராவிடமும் அண்ணாவும் இல்லாத இயக்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை என தனக்கே உரிய பேச்சால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதுமட்டுமல்ல, மற்ற அரசியல்வாதிகளைப்போல அல்லாமல் தினகரன் அணியில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் வாழ்வில் இருந்துமே விலகுவதாக ஒரு அதிரடியான முடிவை வெளியிட்டார். உண்மையாக உழைத்தேன், வருத்திக்கொண்டு கடமையாற்றுவதே என்னுடைய இயல்பு.

இனி எந்தக் கொடியையும் தூக்க மாட்டேன், எந்த தலைமையின் கீழும் செயல்பட மாட்டேன். அரசியல் என்ற சிமிழுக்குள் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.