தமிழினத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொன்றழிக்க இலங்கையோடு போட்டி போட்டது. இந்த துரோகத்தனத்தை தமிழ்நாடே அம்பலப்படுத்தியது. அப்படியென்றால் ஓட்டுமொத்த தமிழர்களும் தேசத்துரோகிகளா? என திமுக -  விசிக கூட்டணியில்  வெடிகுண்டு வைத்துள்ளார் வன்னி அரசு.

இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த  தி.மு.க.வுக்கு எதிராகவும் வைகோ ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது அப்போதைய திமுக அரசு தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. வெகு நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வைகோ முறையிட்டார். ஆனால் வழக்கை டிஸ்மிஸ் செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு அறிவித்து விட்டது. அதன்பிறகு இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தத இந்த வழக்கில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

வைகோவுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக வன்னி அரசு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ; அண்ணன் வைகோ அப்படி என்ன தேசதுரோகம் செய்து விட்டார் என்று தெரியவில்லை. தமது குறுதி உறவான ஈழத்தமிழர்களை கொன்றழிக்கும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவுகிறது என்று சொன்னது தேச துரோகமா? அந்த ஈழத்து உறவுகளை பாதுகாக்ககளமாடும் விடுதலைப்புலிகளைஆதரிப்பது தேசத்துரோகமா?

தமிழினத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொன்றழிக்க இலங்கையோடு  போட்டி போட்டது. இந்த துரோகத்தனத்தை தமிழ்நாடே அம்பலப்படுத்தியது. அப்படியென்றால் ஓட்டுமொத்த தமிழர்களும் தேசத்துரோகிகளா?

திரு.வைகோ அவர்களுக்கு வழக்கப்பட்ட தண்டனை என்பது தமிழர்கள் மீது நடத்தப்படும் ‘அச்சுறுத்தல் யுத்தம்’ இதனால் மேலும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கத்தான் செய்வோம். உரத்து சொல்லுவோம் ஈழத்தமிழர் எங்கள் ரத்தம். ஈழப்படுகொலைக்கு இந்தியாவே காரணம். இந்திய துரோகமே  முதல் காரணம். விடுதலைப்புலிகளே எமது தேசத்தின் காப்பரண்கள்! தமிழர்களாகிய நாங்கள் விடுதலைப் புலிகளை தொடர்ந்து ஆதரிப்போம்!

அண்ணன் வைகோ அவர்களுக்கு வழக்கப்பட்ட தண்டனை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்ட- ஈழ ஆதரவு கொள்கைக்கு கொடுக்கப்பட்ட தண்டனை தான்! இதற்காக அண்ணன் வைகோ அஞ்சி பின் வாங்குபவர் இல்லை. அவருக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் களமாடும் எனக் கூறியுள்ளார்.

அதாவது; இலங்கையில் நடைபெற்ற போர் சமயத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதால்  விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்,  தி.மு.க.வுக்கு எதிராகவும் வைகோ குற்றம்சாட்டினார். அதற்காக திமுக வழக்கு தொடர்ந்தது ஆனால், தற்போது இதுபற்றி கூட்டணியில் உள்ள யாரும் வாய் திறக்காத  நிலையில் வன்னியரசு வாண்ட்டடாக வந்து திமுக காங்கிரஸ்  விசிக கூட்டணியில் குண்டு வைக்கும் விதமாக ஈழப்படுகொலைக்கு இந்தியாவே காரணம். இந்திய துரோகமே  முதல் காரணம் என்றும், வைகோவுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் களமாடும் போன்ற வார்த்தைகள் கூட்டணி தலைவர்களை கொதிக்கச்செய்துள்ளதாம்.