பாஜகவை சேர்ந்தவர்கள் பேசுவதை போல, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்வர்கள் பேசுவதை போல, ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது.

சங்பரிவார்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்து விட்டார்கள்; வன்முறைக்கு வித்திடுகிறார்கள்; மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறார்கள் என்பதற்கு ஆளுநரின் இன்றைய பேச்சு ஒரு சான்றாக இருக்கிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம். பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு பின்புலமாக செயல்பட்டு வருபவர்கள். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நம் நாட்டில் பல முகமூடிகளை அணிந்து செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழகத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்தக் கருத்துக்கு விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல். திருமாவளவன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதில், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை பற்றி தமிழக ஆளுநர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அதனைத் தீவிரவாத அமைப்பு என்றும் ஐஎஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆள்பிடித்துத் தருகிற அமைப்பு என்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் பேசுவதை போல, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்வர்கள் பேசுவதை போல, ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. சங்பரிவார்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்து விட்டார்கள்; வன்முறைக்கு வித்திடுகிறார்கள்; மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறார்கள் என்பதற்கு அவரது இன்றைய பேச்சு ஒரு சான்றாக இருக்கிறது. இச்சூழலில், ஜனநாயக சக்திகள் யாவரும் விழிப்போடு இருக்க வேண்டும்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.