Asianet News TamilAsianet News Tamil

ராணுவத் தளபதியையே எதிர்க்க துணிந்த சிறுத்தைகள்...!! பதவிவெறி என சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்..!!

புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளுக்குமான தலைமை தளபதி பொறுப்பில் பிபின் ராவத் அவர்கள் நியமிக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில்,  அவரது பேச்சு பதவிக்காக எதிர்க்கட்சிகளைச்சாடுகிறாரோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

vck party condemned statement release against defence chief bipin rawat regarding political interfering
Author
Chennai, First Published Dec 28, 2019, 12:41 PM IST

இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்  வரம்பு மீறி  அரசியல் பேசியுள்ளதற்கு எதிராக   அவர் மீது  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் : -  இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற  ஒரு மாநாட்டில் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டிருப்பது  அதிர்ச்சியளிக்கிறது. 

vck party condemned statement release against defence chief bipin rawat regarding political interfering

 இராணுவ த் தளபதி பிபின் ராவத் அவர்கள் அந்நிகழ்ச்சியில் ``மக்களை வழிநடத்துபவரே தலைவர்.  நீங்கள் முன்னோக்கி நடந்தால் மக்களும் உங்களைப் பின்தொடர்வார்கள். ஆனால், அப்படி வழிநடத்தும் தலைவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும். மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் சிறந்த தலைவர்களாக இருக்கவே முடியாது.  பல்கலைக்கழகம்  மற்றும் கல்லூரி மாணவர்களைத் தவறாக வழிநடத்தியதால் அவர்கள்  வன்முறையில் ஈடுபட்டு  பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துகிறார்கள்.  இது நல்ல தலைமை அல்ல” எனப் பேசியுள்ளார். 

vck party condemned statement release against defence chief bipin rawat regarding political interfering

 இந்தியாவில் இதுவரையில் இப்படி எந்த இராணுவத் தளபதிகளும்  அரசியல் பேசியதில்லை.  தற்போது இராணுவத் தளபதி பிபின் ராவத் அவர்கள் வெளிப்படையாக அரசியல் பேசியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.  இராணுவத் துறையில் அரசியல் தலையீடு இருக்குமோ என்னும் அய்யத்தை எழுப்புகிறது.  அத்துடன், இனிவருங்காலங்களில் அரசியலிலும் அரசிலும் இராணுவத்தின் தலையீடும் இருக்குமோ என்கிற அச்சத்தையும் உண்டாக்குகிறது.  

vck party condemned statement release against defence chief bipin rawat regarding political interfering

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவையில் தீர்மானித்தபடி புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளுக்குமான தலைமை தளபதி பொறுப்பில் பிபின் ராவத் அவர்கள் நியமிக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில்,  அவரது பேச்சு பதவிக்காக எதிர்க்கட்சிகளைச்சாடுகிறாரோ என்கிற  சந்தேகத்தையும் எழுப்புகிறது. 

vck party condemned statement release against defence chief bipin rawat regarding political interfering

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெற்ற மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில்  உயர்  அதிகாரியான இராணுவத் தலைமை தளபதி பேசி அரசியலில் தலையிட்டிருப்பது சீருடை பணியாளர்களுக்கான விதிகளையும் மரபுகளையும் மீறும் செயலாகும்.  ஆகவே, இராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios