திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தொண்டர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கொரோனா பரவலுக்கும், கடும் வெயிலுக்கும் இடையே நல்லபடியாக முடிந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்து வந்தனர். 

திமுக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசிக் கொண்டிருக்கிறது” எனக்கூறினார். 

இந்நிலையில் திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தொண்டர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. ‘அங்கனூரில் நான் படித்த பள்ளியில் இன்று வாக்களித்தேன். வழக்கமாக அம்மாவும் உடன் வந்து வாக்களிப்பார். ஆனால், இன்று நான்மட்டுமே தனியாக வாக்களிக்கச் சென்றேன். ஒரு மாதமாக அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சைப்பெற்று வருவதால் அவர் வாக்களிக்க வரவில்லை. மதுரைக்குப் போகிறேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Scroll to load tweet…