கடலூர் மாவட்டம் கறிவேப்பிலங்குறிச்சியில் திலகவதி என்ற மாணவி கொடூரன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. இதனையடுத்து #ViolenceAgainstTNwomen என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

 

இந்த ஹேஷ்டேக் நாடகக் காதல் கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்டுள்ளது அதில், ’’இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்; அவை கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!

 

காதலிப்போம்... காதலிப்போம் கவுண்டர் பெண்ணை காதலிப்போம்... கட்டியணைப்போம் கட்டியணைப்போம் முதலியார் பெண்ணை கட்டியணைப்போம். திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம். வன்னியர் பெண்ணை திருமணம் செய்வோம். கலப்பு திருமணம் செய்வோம். சாதி ஒழிப்போம் சாதி ஒழிப்போம். எங்கள் அண்ணன் வழியில் வழி நடப்போம்’’என விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு முன் கூடி சூளுரைத்த வீடியோவும் அதில் பகிரப்பட்டுள்ளது. 

 

பள்ளி , கல்லூரி , ஏன் பால்வாடி போகும் குழந்தைகளை கூட விடாமல் கற்பழிப்பு மற்றும் கொலை செய்யின்றனர். அவர்களை எதிர்த்து யார் பேசினாலும். அவர்கள் மேல் சாதி முத்திரையும். பிசிஆர் சட்டத்தையும் போட்டு உள்ள தள்ளும் வேலையை செய்கின்றனர். கல்வி பயிலும் காலத்தை குறிவைத்து 'பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்முறை’திணிக்கப்படுவதால், பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் நிறுத்தப்படுகின்றனர்’’ என அந்த ஹேஷ்டேக்கில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்