பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, டகால்டி வேலை செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்  வன்னியரசு விமர்சித்துள்ளார்.

தனது முகநூல் பதிவில், ’’சர்க்கார் பட விளம்பர போஸ்டரில் நடிகர் விஜய் புகை பிடிக்கப்படுவது போல விளம்பரம் இருந்தது. உடனே  மருத்துவர் அன்புமணியுடமிருந்து எச்சரிக்கையும் கண்டனமும்வந்தது. புகையிலை பிடிக்க கூடாது என்று தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். இந்த பரப்புரை அரசியலுக்கும் வணிகத்துக்கும் தானோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

ஏனென்றால், நடிகர் சந்தானம் நடித்துள்ள  ‘டகால்டி’ படத்தில், அவர் புகை பிடிப்பதுபோல்  வந்துள்ள விளம்பரம் மருத்துவர் அன்புமணியின் கண்களுக்கு படவில்லையா? அல்லது வேறு எதுவும் காரணமா? புகையிலை எதிர்ப்பு கொள்கை என்றால் யாவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். ஆனால், அன்புமணியின் அணுகுமுறை விருப்பு, வெறுப்பு, உறவு, பகை அடிப்படையில் அமைந்திருப்பதாக அமைந்துள்ளது. 

நாடக அரசியலைப் போல புகையிலை அரசியலும் மக்களிடம் இனி எடுபடாது. அன்புமணியின் இந்த ‘டகால்டி’வேலையும் பிஸ்னஸ்’தானோ? என்று குறிப்பிட்டுள்ளார்.  நடிகர் சந்தானம், அன்புமணியின் உறவினர்.