வாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், அமைச்சர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில். வாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான மனோகரன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ், திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் ஆகியோருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.