சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதை கண்டித்து வரும் 12ந்தேதி சேலம் ஜங்சனில் ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலத்தை அடுத்த ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன் இதனை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதாகவும், வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மத்திய மாநில அரசுகள் விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வறட்சி காரணமாக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பணத்தட்டுப்பாடு காரணமாக சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், கர்நாடக அரசு தமிழகதிற்குரிய தண்ணீரை தராமல் வஞ்சித்து வருவதாகவும் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து வரும் 12ம் தேதி சேலம் ஜங்சனில் ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.