Asianet News TamilAsianet News Tamil

காற்றின் திசை வேக மாறுபாடு.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை..!!

31.12.2020 தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 01.01.2021 தேதியில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவும்.
 

Variation in wind speed .. Rain in coastal districts for the next 24 hours in Tamil Nadu .. !!
Author
Chennai, First Published Dec 30, 2020, 1:13 PM IST

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்,  உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 31.12.2020 தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

Variation in wind speed .. Rain in coastal districts for the next 24 hours in Tamil Nadu .. !!

01.01.2021 தேதியில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவும். 02.01.2021 தேதியில் கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், மற்றும் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவும். 03.01.2021 தேதியில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் மற்றும் ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலையும் நிலவும். 

Variation in wind speed .. Rain in coastal districts for the next 24 hours in Tamil Nadu .. !!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, காரைக்கால்  (காரைக்கால்), தரங்கம்பாடி  (நாகப்பட்டினம்) தலா 3 சென்டிமீட்டர் மழையும், குடவாசல் (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்), வேதாரண்யம்  (நாகப்பட்டினம்), திருப்பூண்டி  (நாகப்பட்டினம்), நாகப்பட்டினம்  (நாகப்பட்டினம்) தலா 2 சென்டிமீட்டர் மழையும், மணல்மேடு  (நாகப்பட்டினம்), சீர்காழி ( நாகப்பட்டினம் ), ஜெயன்கொண்டம் (அரியலூர் ), திருவையாறு  (தஞ்சாவூர்), அகரம்  சீகூர் (பெரம்பலூர்) தலா 1 சென்டிமீட்டர் மழையும், பதிவாகி உள்ளது.

Variation in wind speed .. Rain in coastal districts for the next 24 hours in Tamil Nadu .. !!

டிசம்பர் 31.முதல் ஜனவரி 02 வரை, குமரிக்கடல்  பகுதிகளில்    பலத்த  காற்று  வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். என்பதால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios