10.5 சதவீத இட ஒதுக்கீடுலாம் எங்களுக்கு பத்தாது என்று கூறிய அவர் அதனையும் தற்போது ரத்து செய்துள்ளார்கள், அரசும் நீதிமன்றமும் வன்னியர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றார்.

50 வருடங்களுக்கு மேல் சட்டத்திற்கு உட்பட்டு போராடி விட்டோம், இனி எங்களுக்கு தேவையான இட ஒதுக்கீட்டை நாங்களே எடுத்துக் கொள்ள ஓட்டு மொத்த வன்னியர்களும் களத்தில் இறங்கி போராடுவோம் என வன்னிய குல சத்திரிய சங்க தலைவர் தமிழரசன் தெரிவித்துள்ளார். 

வன்னிய சமூகத்திற்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் மற்றும் வன்னியர் பொதுச் சொத்து வாரியத்தை நேர்மையாக செயல்பட வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னிய குல சத்திரியர் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தின் இடையே பேட்டி அளித்த வன்னிய குல சத்திரியர் சங்க தலைவர் தமிழரசன் பேசியதாவது, இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். வன்னியர் சமூகத்தினருக்கு 20 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டி 50 வருடங்களுக்கு மேல் போராடி வருகிறோம்.

10.5 சதவீத இட ஒதுக்கீடுலாம் எங்களுக்கு பத்தாது என்று கூறிய அவர் அதனையும் தற்போது ரத்து செய்துள்ளார்கள், அரசும் நீதிமன்றமும் வன்னியர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றார். மேலும் 50 வருடங்களுக்கு மேல் சட்டத்திற்கு உட்பட்டு போராடி விட்டோம், இனி எங்களுக்கு தேவையான இட ஒதுக்கீட்டை நாங்களே எடுத்துக் கொள்ள ஓட்டு மொத்த வன்னியர்களும் களத்தில் இறங்கி போராட உள்ளதாக தெரிவித்தார். இரண்டு மாதங்கள் அனைத்து வன்னியர்களும் மாவட்டம் மாவட்டமாக களத்தில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் வன்னியர்கள் பொது சொத்து வாரியத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அதனை நேர்மையாக செயல்பட வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும் வன்னியர் அறகட்டளையை ராமதாஸ் அறகட்டளை என பெயர் மாற்றம் செய்துள்ளார்கள் இது நியாயமற்ற செயல் அதனை மாற்றி அமைக்க அரசுக்கு கோரிக்கை வைப்பதாக கூறினார்.