Asianet News TamilAsianet News Tamil

குரு குடும்பத்துக்கே இந்த கதின்னா நாங்க சும்மா விடுவோமா? வரிந்துகட்டி வக்காளத்துக்கு வரும் வன்னியர் தலைவர்கள்!

மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று வன்னியர் சங்க தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Vanniyar Community Leaders supports Guru Family
Author
Chennai, First Published Dec 8, 2018, 7:26 PM IST

கடந்த வாரம் குருவின் மகள் விருத்தாம்பிகை தன் அத்தை மகன் மனோஜை திருமணம் செய்துகொண்டார். பாமக நிறுவனர் தனது சொந்தக்காரன் தனராஜின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பியதாகவும் குருவின் தங்கை குடும்பத்தினர் தனது மகனுக்கு குரு மகளை கல்யாணம் செய்து வைத்ததால்  பாமகவினர் கடுமையான இடையூறு செய்வதாகவும் குருவின் குடும்பத்த்தினரை காடுவெட்டிக்குள்ளே விடாமல் மிரட்டுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த  படையாச்சியார் பேரவையின் தலைவரும், பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவருமான பெரோஸ் காந்தி, “காடுவெட்டி குருவின் மகளுடைய திருமணத்தை லட்சக்கணக்கானவர்கள் கூடி பாமகவும், வன்னியர் சங்கமும் முன்னின்று விழாவாக நடத்தியிருக்க வேண்டும். அவர் தனக்கு விருப்பமான திருமணம் செய்துகொண்டுவிட்டார் என்றால் கூட, வரவேற்பு நிகழ்ச்சியையாவது பிரம்மாண்டமாக பாமகவினர் நடத்திக் காட்டியிருக்க வேண்டும்.

Vanniyar Community Leaders supports Guru Family

ஆனால், குருவின் குடும்பத்தினர் இன்று தங்கள் ஊருக்குள் நுழையவே முடியவில்லை என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கதறுகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் எப்படி சும்மா இருக்க முடியும்? காடுவெட்டி குரு குடும்பம் அத்தனை பேரும் பாமவை புரிந்துகொண்டுவிட்டோம். குருவின் மனைவி  புரிந்துகொள்வார் என்று சொல்கிறார்கள்.

நாங்கள் வன்னிய சமுதாய்த்தைச் சேர்ந்த தலைவர்கள். வன்னியர் சமுதாயத்துக்காக பாடுபட்ட  குருவின், ‘வன்னியர் சமுதாயத்தினர் யாரெல்லாம் இருக்கிறீர்களோ எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆவண செய்ய வேண்டும்’ என்று  கேட்டதால் நாங்கள் முன் வந்திருக்கிறோம் என பேசினார். 

Vanniyar Community Leaders supports Guru Family

மேலும், தமிழக முதல்வர், டிஜிபி, மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் இருக்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து குருவின் குடும்பத்துக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம். இதற்காக முதல்வர், டிஜிபி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்” என்று பெரோஸ் காந்தி கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios