Asianet News TamilAsianet News Tamil

அவரு அப்பா இன்னமும் திருந்தல, அவரு சொல்றத பார்த்தா சந்தேகமா இருக்கு!! அன்புமணியை டரியலாக்கிய வன்னி அரசு

‘பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் போகக்கூடாது.  இந்துமத ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது’ என்று  அன்புமணி கருத்து கூறியிருப்பதன் மூலம் பா.ம.க. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கிளை அமைப்பாக மாறிவிட்டதோ என்கிற ஐயம் வருகிறது’ என்கிறார் வி.சி.க.வின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு.
 

Vanni Arasu facebook Status about PMK Anbumani
Author
Chennai, First Published Oct 21, 2018, 1:11 PM IST

‘பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் போகக்கூடாது.  இந்துமத ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது’ என்று  அன்புமணி கருத்து கூறியிருப்பதன் மூலம் பா.ம.க. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கிளை அமைப்பாக மாறிவிட்டதோ என்கிற ஐயம் வருகிறது’ என்கிறார் வி.சி.க.வின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு.

“பாமகவுடன் எந்த காலத்திலும் இனி கூட்டணி இல்லை “என்று எமது தலைவர் எழுச்சித்தமிழர் அறிவித்திருந்தார்.

அந்த நேர்காணலை பார்த்த  தமிழ்த்தேசியம் பேசுகிற நண்பர் ஒருவர்  “ அண்புமணி நல்ல படித்தவர். ராமதாசு போல சாதிய பார்வை அவரிடம் இல்லை. நிறைய மாறியிருக்காங்க. தலித்துகள் பிரச்சனையில் கூட நிறைய மாறியிருக்காங்க. இப்படிபட்ட சூழலில்  உங்க தலைவர் இப்படி அறிவிக்கலாமா?” என்று கேட்டார். ( இன்னமும் ராமதாசு கும்பலை இப்படி போலி தமிழ்த்தேசியவாதிகள் நம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது)

மருத்துவர் அன்புமணி படித்தவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.ஆனால் படிப்புக்கும் இவர் செயல்பாட்டுக்கும் எதுவும் தொடர்பு இருக்கிறதா? ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற முழக்கத்தோடு களமிறக்கப்பட்டார். என்ன மாற்றத்தை கொடுத்து விட்டார்கள்? அவரது அப்பாவின் அதே சாதிய கொள்கையோடும் இந்துத்துவ கொள்கையோடுதான் இன்னமும்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதற்கு இரு உதாரணங்களை சொல்ல முடியும்.

உதாரணம் 1
 
‘கேள்வி கேளுங்கள்’ என்னும்  நிகழ்ச்சியில் மருத்துவர் அன்புமணியிடம் கல்லூரி மாணவி ஒருவர் கேள்வி கேட்கிறார். 
அதாவது, கல்லூரிகளில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் ‘ஸ்காலர்சிப்’ கொடுத்து மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்குவது சரியா?சாதி ஒழிக்க என்ன வழி? என்று சுற்றி வளைத்து கேட்கிறார். அதற்கு பதிலளித்த அன்புமணி, ஆரம்பத்தில் சரியாக சொல்வது போல வந்து இறுதியில் குழப்புகிறார்.

அதாவது, சாதி ஒழிந்து சமத்துவம் வர  கல்விதான் அவசியம்.திருமணம் எல்லாம் இல்லை என்று போகிற போக்கில்  பாமகவின் உள்ளீடான கொள்கையை பேசுகிறார். சாதி ஒழிப்பு குறித்து இன்னமும் தெளிவு பெற  புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய ‘சாதி ஒழிப்பு’ நூலை மருத்துவர் அன்புமணி படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். அந்த நூலை படித்தால் தான் ‘அகமண முறை’குறித்தும்  ‘புறமண முறை’குறித்தும் அம்பேத்கர் விஞ்ஞான ரீதியாக விளக்கியிருப்பதை புரிந்து கொள்ளமுடியும்.

( இது குறித்து விவாதிக்க விரும்பினால் அவரது பாணியிலேயே தயாராக இருக்கிறோம்)

உதாரணம்-2
 
“சபரிமலைக்கு பெண்கள் போக்ககூடாது. ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது” மருத்துவம் படித்த அன்புமணியின் கருத்து இது. பாலின சமத்துவம் குறித்த அவரது பார்வை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

கோவிலுக்குள் தலித்துகள் போக கூடாது என்கிற ஐதீகத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் தான் பெண்களையும் தடுத்து வருகிறார்கள். இதில் அன்புமணி மட்டும் என்ன மாற்றாக சொல்லிவிடப்போகிறார்?

சாதி தான் இந்து மதத்தை கட்டிக்காத்து வருகிறது என்பதை புரட்சியாளர் அம்பேத்கர் ஆய்வுகள் பல நடத்தி சொன்னார். அந்த ஆய்வு, சாதியவாதியான அன்புமணி இந்து மதத்தை, அதன் ஆச்சாரத்தை காப்பாற்றுகிறார் என்பதை தான் காட்டுகிறது.

பாசக- இந்து முன்னணி- ஆர்எஸ்எஸ் வரிசையில் பாமகவும் இருக்கிறது  என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின்  கிளை அமைப்பாக பாமக மாறிவிட்டதோ என்ற  அய்யம் எழுகிறது’’ என்கிறார் வன்னி அரசு.

Follow Us:
Download App:
  • android
  • ios