மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குபழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சில தொழில்களுக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பின்பு இந்த தளர்வுகள் பாதிக்கப்பட்ட இடங்களில் செல்லுபடியாது என்று பின்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வாணியம்பாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் கடைகளை திறந்துள்ளனர். இதைப்பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்கிருக்கும் பழவண்டிகளை தள்ளிவிட்டும், பழங்களை தூக்கி எரிந்தும் கடைகளை திறக்கக்கூடாது என்று கடுமையாக கண்டித்துள்ளார். இவர் இப்படி நடந்ததை அடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் ரவுடி போல ஒரு ஆணையர் செயல்படுவதா என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்பேடு போல வாணியம்பாடி ஆகக்கூடாது என்றுதான் நான் விரும்பினேன். அதுமட்டுமில்லாமல், நான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்ததோடு வியாபாரிகளை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டு இழப்பீட்டை வழங்கினார்.  சமூக இடைவெளி கடைபிடிக்கபாடாததால் தான் சாலை ஓர பழ வியாபாரிகளின் பழங்களை வீசி எறிந்து கடுமையாக நடந்து கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  வாணியம்பாடி ஆணையர் அத்துமீறல் குறித்து மாநில மனித உரிமை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஆணையரை 14 நாளில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.