வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து சர்ச்சைகள் கச்சைகட்டி ஆட ஆரம்பித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சூர்யா தேவி வனிதா விஜயகுமார் ஆகியோர் மாறிமாறி வடபழனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்தொடர்ச்சியாக விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்கள்.

வனிதா விஜயகுமார் , பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து பலரும் இத்திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் இரண்டு முறை வனிதா புகார் அளித்திருந்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா விஜயகுமார், சூர்யா தேவி, ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்து என்னைப் பற்றி அவதூறாக பேசிவருவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சூர்யா தேவி கஞ்சா விற்பனையை பாதுகாப்பாக நடத்துவதற்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரம் ஒன்றையும் வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் இணையதளத்தில் வெளியிட்டார் அதோடு காவல்துறையினரிடம் ஆதாரங்களை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.