முதலமைச்சர் ஓ.பி.எஸ்க்கு திருவண்ணாமலை எம்.பி வனரோஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இன்று ஒரே நாளில் 4 எம்.பி.க்கள் ஓ.பி.எஸ் க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மைத்ரேயன், சுந்தரம், அசோக்குமார், சத்தியபாமா ஆகியோர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்ற திருவண்ணாமலை எம்.பி. வனரோஜா ஆதரவு தெரிவித்திருப்பது பன்னீரின் ஆதரவாளர்களிடையே பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மிகுந்த அன்பு பாராட்ட பட்டவர் வனரோஜா.

தமிழகத்தில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பரபரப்பான செய்திகள் வெளியாகி மக்களை இடைவிடாத உற்சாகாத்தில் திளைக்க வைத்து கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த வனரோஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்தே ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்ததாகவும், துரோகம் இளைத்தவர்கள் யார் என்று போக போக தெரியும் எனவும் தெரிவித்தார்.

இவர்களை தொடர்ந்து இன்னும் பலர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிக்க வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.