vallal perruman expired
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்பி டாக்டர் வள்ளல் பெருமாள் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 66.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி பா.வள்ளல்பெருமால் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவருக்கு வயது 66.
வள்ளல் பெருமான் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 1984, 1989, 1991 ஆகிய மூன்று முறை இருந்தார், மேலும் 2001ம் ஆண்டு காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ வாகவும் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரிந்து வந்து ஜனநாயக காங்கிரஸ் என்ற புதிய கட்சி தொடங்கியபோது அவருடன் இருந்தார். மேலும் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
