Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் உடன் மோதலா..! டிடிவி தினகரனை சந்தித்ததில் எனக்கு விருப்பம் இல்லையா.? இபிஎஸ்யை விளாசும் வைத்தியலிங்கம்

ஓ. பன்னீர்செல்வம்,  டிடிவி. தினகரன் சந்தித்ததை மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தநிலையில்,  "நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா" என்பதற்கேற்ப அமைந்துள்ளதாக இபிஎஸ்யை வைத்தியலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran
Author
First Published May 12, 2023, 11:26 AM IST

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற சட்ட போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டு வரும் டிடிவி தினகரனை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பன்ருட்டி ராமசந்திரன் சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்த தெரிவித்த எடப்பாடி பழனிசாமி,  மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான். ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஓட்டகம் புகுந்ததைப் போன்றது என தெரிவித்தார்.

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

டிடிவி -ஓபிஎஸ் சந்திப்பு

மேலும் டிடிவி.தினகரனை ஓபிஎஸ் சந்திக்கும் போது ஓபிஎஸ்வுடன் எப்போதும் கூட இருக்கும்  3 பேர் எங்கே? என கேள்வி எழுப்பினார்.  வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகிய 3 பேரும் ஓபிஎஸ்ஐ கைவிட்டுவிட்டதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட வைத்தியலிங்கம், தான் யார் யார் காவைப் பிடித்து, ஊர்ந்து முதலமைச்சராக ஆனார் என்பதையும்; யாரிடம் கெஞ்சி கூத்தாடி, தூதுவிட்டு முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம் நீடித்தார் என்பதையும் மறந்து,  இல்லை மறைத்து, திரு ஓ- பன்னீர்செல்வம் அவர்களும், திரு. டிடிவி. தினகரன் அவர்களும் சந்தித்ததை மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று துரோகி விமர்சித்துள்ளது.

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

அழிவுப் பாதையை நோக்கி அதிமுக

"நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா" என்பதற்கேற்ப அமைந்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில், இருவரின் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததைப் போன்று உள்ளது என்று துரோகி சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. “ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது" என்ற பழமொழிக்கேற்ப, துரோகியின் நுழைவால் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவதற்கான சந்திப்புதான் இருவரின் சந்திப்பு.

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

ஒன்று கூடி எடுத்த முடிவு

புது டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் சந்திப்பின்போது சிலர் இடம்பெறாதது குறித்து தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளிக்க இயலாத திரு. எடப்பாடி பழனிசாமி, திரு. ஓ. பன்னீர்செல்வம் - திரு. டி.டி.வி. தினகரன் சந்திப்பின்போது, திரு. வைத்திலிங்கம் எங்கே? திரு ஜெ.சி.டி. பிரபாகர் எங்கே? திரு மனோஜ் பாண்டியன் எங்கே? என்று வினவியிருக்கிறார். இந்தச் சந்திப்பே, அண்ணள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. பண்ரூட்டி ச. ராமச்சந்திரன், திரு. கு.ப. கிருஷ்ணன், திரு. ஜெ.சி.டி. பிரபாகர், திரு. மனோஜ் பாண்டியன் மற்றும் நான் ஆகியோர் ஒன்றுகூடி முடிவு எடுத்த பிறகுதான்  நடைபெற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களை பற்றி பேசும்முன் தன் முதுகில் உள்ள ஓட்டையை திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பார்க்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

தி.மு.க.வின் 'B' டீம் துரோகி

ஒரு தலைவர் இறந்தால், அதற்கான இரங்கல் தீர்மானம் என்பது மாண்புமிகு பேரவைத் தலைவரால் கொண்டு வரப்படுவது என்பது மரபு இந்த மரபை முற்றிலும் மீறி, முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுற்றது குறித்த இரங்கல் தீர்மானத்தை மாண்புமிகு பேரவை முன்னவர் மூலம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழியச் செய்தது துரோகி. இந்தத் தீர்மானத்தில் அவரை வெகுவாக புகழ்ந்து பேசியது துரோகி, சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சருக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக திரு. துரைமுருகன் அவர்கள் துரோகியை சந்தித்தபோது, துரோகி என்ன சொன்னார் என்பதை திரு. துரைமுருகன் அவர்களே வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளிலிருந்து, தி.மு.க.வின் 'B' டீம் துரோகி என்பது கண்கூடாகத் தெரிகிறது, 

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

பண்ருட்டி இராமச்சந்திரனனை விமர்சிப்பதா.?

இதுபோன்ற செயல்களும், கொலை, கொள்ளை வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக ரகசியமாக சந்திப்பது, தூது விடுவது போன்றவைதான் தி.மு.க.வின் “B” டீம் என்பதற்கான உதாரணங்களாகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், தற்போதும் தி.மு.க.வின் 'B' டீமாசு செயல்பட்டுக் கொண்டிருப்பவர் துரோகி. இதளை அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். அடுத்ததாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகரும், மூத்த அரசியல்வாதியுமான திரு. பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் கிளைச் செயலாளருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று துரோகி விமர்சனம் செய்திருப்பது அவரது அறியாமையையும், ஆளுமைத் திறமையின்மையையும் கோடிட்டுக் காட்டுகிறது. திரு. பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர். அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர். 

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

மனம் ஒரு குரங்கு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமைச்சரவையில் பல ஆண்டு காலம் அமைச்சர் பதவியை வகித்தவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அன்பைப் பெற்றவர். இவரை விமர்சனம் செய்வது என்பது ஆணவத்தின் வெளிப்பாடு. கொலை வழக்கிலிருந்து தப்பியது எப்படி? சட்டமன்ற உறுப்பினரானது எப்படி? அமைச்சரானது எப்படி? முதலமைச்சரானது எப்படி? முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம் நீடித்தது எப்படி? என்பதையெல்லாம் மறந்து மனம் போன போக்கில் துரோகி பேட்டி அளித்திருப்பதைப் பார்க்கும்போது 'மனம் ஒரு குரங்கு' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அண்ணன் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினார் என்று துரோகி கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, நிருபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், நிருபிக்க முடியாவிட்டால் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியலிலிருந்து விலகுவாரா என்றும் அண்ணன் அவர்கள் கேட்டார். இதுநாள் வரை இதற்குப் பதில் இல்லை. அதேபோல, அண்ணன் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர தூதுவிட்டதாக பேசினார் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள். இது "அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு" என பேட்டி அளித்தார் அண்ணன் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள். இதற்கும் இதுநாள் வரை எந்தப் பதிலும் இல்லை. 

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

எடப்பாடி பழனிசாமியின் குட்டு வெளிப்பட்டுவிட்டது

அந்த வகையில், தற்போது மற்றுமொரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு இருக்கிறார் திரு. எடப்பாடி பழனிசாமி. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் கோயபல்ஸ் வேலையை செய்து கொண்டிருக்கிறார் திரு. எடப்பாடி பழனிசாமி. இது நிச்சயம் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எடுபடாது. 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு' என்பார்கள். ஆனால், கெட்டவனின் புளுகு எட்டு மணி நேரத்திற்கு கூட தாங்காது. இந்த வகையில் திரு. எடப்பாடி பழனிசாமியின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. தி.மு.க.வின் 'B' டீமாக செயல்படுவது துரோகி என்பதை தொண்டர்களும், மக்களும் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

Vaithilingam explanation regarding OPS meeting with TTV Dhinakaran

துள்ளுகிற மாடு பொதி சுமக்காது

துரோகியின் பேட்டிகளைப் பார்க்கும்போது 'துள்ளுகிற மாடு பொதி சுமக்காது" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. அதாவது துள்ளுபவர்கள் பொறுப்பை ஏற்கமாட்டார்கள். துள்ளாத தலைவனுக்கு மக்கள் வாக்களிக்க முடிவெடுத்துவிட்டார்கள். "எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை" என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, துரோகி அவர் செய்த பாவத்திலிருந்து என்றைக்கும் விடுபட முடியாது என வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்-ஐ கைவிட்ட வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன்.. இபிஎஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்.!
 

Follow Us:
Download App:
  • android
  • ios