காவல்துறை அலட்சியத்தால் 22 பேர் மரணம்.! இனியும் இது போன்று நடக்க கூடாது.. இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிடுக- வைகோ

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Vaiko urged to prevent recurrence of deaths due to Counterfeit liquor

கள்ளச்சாராயம் - 22 பேர் மரணம்

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாரயம் சாப்பிட்டவர்கள் உடல்நிலைபாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற உயிரிழப்புகள் தமிழகத்தை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்து எக்கியார் குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இதை மட்டும் செய்து காட்டுனீங்கனா அரசியலை விட்டு விலக தயார்... இபிஎஸ்க்கு சவால் விடும் வைத்தியலிங்கம்

Vaiko urged to prevent recurrence of deaths due to Counterfeit liquor

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

இதேபோல செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. முழு மதுவிலக்கு வேண்டும் என்று கோரி வரும் நிலையில், இன்னொரு பக்கத்தில் இது போன்ற கள்ளச்சாரய விற்பனை அமோகமாக நடப்பதும், அதனால் உயிர் பலிகள் ஆவதும் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.  அரசு விற்பனை செய்யும் மதுவைப் போன்றே கள்ளச்சாராயப் புட்டிகள் புழக்கத்தில் இருப்பதும், அதனைக் கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையினரின் அலட்சியத்தாலும் இது போன்ற உயிர் இழப்புகள் நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கள்ளச்சாரயம் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர்,

Vaiko urged to prevent recurrence of deaths due to Counterfeit liquor

முழு மது விலக்கு செயல்படுத்திடுக

அதனை தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாரயம் அருந்தி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தக்க சிகிச்சை மேற்கொள்ள ஆணையிட்டு உள்ளது ஆறுதல் தருவதாகவும்,  இனி இது போன்ற துயர நிகழ்வுகளுக்கு இடம் இல்லாத நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்,  மேலும் அரசு மதுபான விற்பனைக் கடைகளை படிப்படியாகக் குறைத்து, முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் மதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும் எனவும்  வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அம்பலப்படுத்திய இபிஎஸ், அண்ணாமலை.. கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகளுக்கு ரூ.50,000 நிவாரண தொகை ரத்து.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios