Asianet News TamilAsianet News Tamil

கண்ணின் இமை மாதிரி அவரை பாதுகாப்பேன்…. இவர் மேல்  வைகோ காட்டும் உருக்கம்!!

vaiko talk about stalin in a public meeting
vaiko talk about stalin in a public meeting
Author
First Published Mar 1, 2018, 9:58 AM IST


திமுக தலைவர் கருணாநிதியைப் பாதுகாப்பது போல் மு.க.ஸ்டாலினையும் கண்ணின் இமை போல பாதுகாப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கம் காட்டியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, வேப்பேரி பெரியார் திடலில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், கவிஞர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், பா.விஜய் ஆகியோர்  பங்கேற்ற வாழ்த்துத் தெரிவித்தனர்.

vaiko talk about stalin in a public meeting

அப்போது பேசிய வைகோ, திமுக . இளைஞரணி மதுரையில் தொடங்கப்பட்ட போது நான் மு.க.ஸ்டாலினுடன் இருந்திருக்கிறேன். அவரது பேச்சை அன்றில் இருந்தே ரசித்திருக்கிறேன். இன்று நான் உறுதி தருகிறேன். 29 வருடங்களாக எப்படி கருணாநிதியை ஒரு துரும்பு கூட படாமல் பாதுகாத்தேனோ, அதேபோல மு.க.ஸ்டாலினையும் கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் உன்று உறுதியாக தெரிவித்தார். 

தி.மு.க.வுடன் வைகோ கரம்கோர்த்து உள்ளானே? ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாமோ? என்று அனைவரும் யோசிக்கிறார்கள். எந்த பதவி ஆசையும், பண ஆசையும் எனக்கு இல்லை. என் நேர்மை உலகு அறிந்தது. தான் அணிந்திருந்த கவசத்தை தர்மத்துக்காக கர்ணன் அவிழ்த்தான். ஆனால் எந்த சூழ்நிலையிலும், எதற்கும் என் நேர்மை எனும் கவசத்தை அவிழ்க்க மாட்டேன் என்றும் வைகோ குறிப்பிட்டார். 

vaiko talk about stalin in a public meeting

தி.மு.க.வை அழிக்க பா.ஜ.க. வஞ்சக திட்டம் தீட்டிவருகிறது. திராவிட இயக்கத்தை வேரோடு அழிக்க பார்க்கிறது. இதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாத என்றும் அவர் தெரிவித்தார்.. 

எங்களது முழு பலத்தையும் தி.மு.க.வுக்கு கொடுத்து களத்தில் இறங்குவோம். திராவிடத்தை வெல்ல எந்த முயற்சிக்கும், எந்த வித சக்திகளுக்கும் அனுமதி தர மாட்டோம். தமிழகத்தில் லட்சியங்கள் வெல்ல, தர்மம் நிலைக்க தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். முதலமைச்சராக  மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கப்போகும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் வைகோ தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios