உங்கள் உரை சிறப்பாக இருக்கிறது ஆனா, கொஞ்சம் கோபத்தை குறைத்த்துகொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்த சக எம்பியை , எனக்கு அலோசனை சொல்ல நீ யார் என்று வைகோ காட்டமாக பேசியிருப்பது  சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது. 

நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் , முடிந்த அளவிற்க்கு பேச வாய்ப்பு பெற்று தங்களின் இருப்பை தக்கவைக்க தமிழக எம்பிக்கள் பட்டபாட்டை நாம் கண்கூடாகவே பார்க்க முடிந்தது.   ஆனால் அவைக்குச் சென்ற ஒரு சில நாட்களிலேயே தான் யார் என்பதை நிரூபித்து காட்டினார் வைகோ,  காஷ்மீர் விவகாரத்தில் பேசக்கிடைத்த வாய்ப்பில்  பாஜகவிற்க்கு மாறாக,  தனது கூட்டணி கட்சியான காங்கிரஸயே வெளுத்துகட்டிய வைகோவின் பேச்சைக்கேட்டு அனைவருமே ஆடிப்போயினர்.  வைகோவா இது என ஒருகனம் பாஜகவினரே திக்குமுக்காடிப்போயினர். அந்தளவிற்கு யாரை எப்போது வச்சிசெய்வார் யாரை என்போது கட்டியணைப்பார்  என்று கணிக்கவே  முடியாத உணர்ச்சிவயத்தின் உருவமாக திகழ்கிறார் வைகோ.  இது தெரியாமல் அவரிடம் வாய்கொடுத்த தமிழக  எம்பி ஒருவரை பாராளுமன்ற மைய அரங்கில் வைத்து வச்சி செய்த சம்பவம்தான் தற்போது வெளியாகி சுவாரஸ்யமாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது, காஷ்மீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் உரையாற்றி முடித்துவிட்டு சென்ட்ரல் ஹாலுக்கு வைகோ சென்றிருக்கிறார். அப்போது, அங்கு இருந்த திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், ‘அண்ணே உங்க உரை சிறப்பா இருந்தது. ஆனா, நீங்க பேசும்போது அதிகமாக கோபப்படுறீங்க. கோபத்தை மட்டும் கொறச்சுக்கலாமே’ என்று அன்பாக அட்வைஸ் செய்திருக்கிறார். இதைக் கேட்டு கொந்தளித்த வைகோ, ‘நான் அதிகம் கோபப்படுகிறேனா, என் கோபத்த கொறச்சுக்கச் சொல்றதுக்கு நீ யார்’ என்று கூறி ஏகத்துக்கும் டென்ஷனாகிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். காயம்பட்ட எம்பி நண்பர்களிடம் சொல்லி புலம்பி வருகிறாராம்.