Asianet News TamilAsianet News Tamil

தூள்...தூளான வைகோ ராசி சென்டிமெண்ட்..! 38 தொகுதிகளை அள்ளியது திமுக..!


’நடைப்பயண நாயகன்’என்கிற அடைமொழிக்கு பொறுத்தமான நபரென்றால் அது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையே சாரும். 
 

vaiko sentiment
Author
Tamil Nadu, First Published May 23, 2019, 5:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

’நடைப்பயண நாயகன்’என்கிற அடைமொழிக்கு பொறுத்தமான நபரென்றால் அது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையே சாரும். 

உணர்ச்சி வசப்படுவதில் வல்லவரான வைகோ குறித்து பல செயற்கறிய மற்றும் அளப்பறிய சேவைகள் குறித்த இன்றைய மீம்ஸ் இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருப்பதில் வைகோவுக்கு நிகர் வைகோ மட்டுமே. தமிழ்,தமிழர்களுக்கான முன்னேற்றம், தமிழர் மறுவாழ்வு குறித்த பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள் என வைகோ சந்திக்காத விஷயங்களே கிடையாது. vaiko sentiment

பலகோடி ரூபாயை லஞ்சமாக கொடுக்க பலமுறை முயற்சித்தும் தோல்வியையே சந்தித்தனர் ஸ்டெர்லைட் உரிமையாளர்கள். வைகோ நினைத்திருந்தால் பலகோடி ரூபாயை வாங்கிக் கொண்டு சொகுசாக  இருந்திருக்கலாம். ஆனால், பிரச்னை ஆரம்பித்த நாள் முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை பசுமை தீர்ப்பாயத்தில் படியேறி வாதாடி வெற்றியும் பெற்றார். 

இதே போன்றுதான் முல்லை பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை, கூடங்குளம் பிரச்னை, பாலாறு பிரச்னை என தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தன்னையே வருத்திக் கொண்டு வெறித்தனமாக போராடுவதில் வைகோவுக்கு நிகர் வைகோ தான். vaiko sentiment

இவை எல்லாவற்றையும் விட முத்தாய்ப்பாக தமிழின தலைவர் பிராபகரனை அறிந்த நாள் முதல் தற்போது வரை ஈழத்தமிழர்களின் விடுதலை மற்றும் முன்னேற்றத்திற்காக 40 ஆண்டுகளாக ஒரே கொள்கைப்பிடிப்புடன் இருக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே என்பது அவரை நன்கு அறிந்த அனைவருக்கும் இது தெரியும். 

 விட பதவி முக்கியமில்லை என்பதை உணர்த்தும் வகையில் எந்தத் தலைவரும் செய்ய இயலாத செயலாக தனக்கு கிடைத்த மத்திய அமைச்சர் வாய்ப்பையும் துச்சமாக தூக்கி எரிந்தார்.  விருதுநகர் தொகுதியை சாதாரண தொண்டராக இருந்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்கு விட்டுக் கொடுத்து எம்.பி.,யாக்கினார் என்பது வரலாறு. இதுமட்டுமா? தான் எந்தப் பதவியில் இல்லாதபோதும், தனக்காக பதவி கேட்காமல் தன் கட்சியை சேர்ந்த பொள்ளாச்சி கிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், ஈரோட்டில் தற்போது வெற்றி பெற்றுள்ள கணேசமூர்த்தி ஆகியோரை எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்தார் வைகோ. vaiko sentiment

இப்படி பதவி மீது தீவிர ஆசையை காட்டாத வைகோதான் பின் நாளில் ராசியில்லாதவர், செண்டிமெண்ட் இல்லாதவர் என மீம்ஸ் கிரியேட்டர்கள், மற்றும் சில சில்மிஷக்காரர்களால் உருவகப்படுத்தப்பட்டார். கால சூழல்களும் மீம்ஸ் கிரியேட்டர்களின் பசிக்கு தீனிபோடுவதாகவே அமைந்திருந்தது.

ஆனால், தற்போது தான் சார்ந்துள்ள திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று  சென்டிமெண்டுகளை உடைத்து வெற்றிக்கோட்டை தொட்டுள்ளார் வைகோ. அதுமட்டுமின்றி ஏற்கெனவே கூட்டணி ஒப்பந்தப்படி மாநிலங்களவை உறுப்பினராகி விரைவில் நாடாளுமன்றத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு காலடி எடுத்து வைக்க இருக்கிறார் வைகோ. 

Follow Us:
Download App:
  • android
  • ios