திமுக அதிமுக வாக்கு வங்கிகள் அப்படியே உள்ளது எனவும், திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் பலவீனம் அடையவில்லை எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என 2 அணிகளாக பிளவடைந்தது.  இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே டிடிவி துணை பொதுச்செயலாளராகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். 

பின்னர், பன்னீர்செல்வத்தின் ராஜதந்திரத்தால் டிடிவிக்கும் எடப்பாடிக்கும் சச்சரவுகள் ஏற்பட்டன. 

இதையடுத்து அதிமுக 3 அணியாக பிளவடந்தது. அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையால் தமிழகத்தில் அரசு செயல்படாத நிலை நீடித்தது. 

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரல் கொடுத்தாலும் எடுபடவில்லை. அரசை கலைக்கமுடியவில்லை. இதனிடையே பாஜக அதிமுகவுக்கு உதவி செய்வது போல் தமிழகத்தில் ஆட்சியை நிலைநாட்ட துடித்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தை கிள்ளுக்கீரையாக மத்திய அரசு நினைத்து உதைப்பந்தாய் உருட்டி விளையாடுவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழகம் இந்தியாவில் உள்ளதா என்ற சந்தேகம் என் மனதில் எழுகிறது என்றும் அவர் கூறினார். 

திமுக அதிமுக வாக்கு வங்கிகள் அப்படியே உள்ளது எனவும், திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் பலகீனம் அடையவில்லை எனவும் தெரிவித்தார்.