தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை வருடம் தோறும் , தான் பிறந்த மண்ணில் சாதி மத பேதமின்றி அனைவரோடும் ஒற்றுமையாக திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம் . அதே போல் இந்த வருடமும் தலைவர் வைகோ அவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கபட்டி கிராமத்திற்கு கடந்த 13 ஆம் தேதி முதல் 17 வரை இருந்து பொங்கல் விழாவை  கொண்டாடுகிறார். 

கிராமத்தில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி , அம்பேத்கர் திடலில் பொங்கல் விழாவிற்கான போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர் . மேலும்  கிராமத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் வருங்கால தலைமுறையை ஊக்குவிப்பதற்காக கவிதை , கட்டுரை , ஓவிய ,பேச்சுப் போட்டிகள் நடைப்பெற்றன . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் வைகோ அவர்கள் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்துகிறார் .

ஒவ்வொரு வருடமும் தலைவர் வைகோ அவர்கள் தனது சொந்த ஊருக்கு சிறப்பு விருந்தினர்களை வரவழைத்து கெளரவித்து வருகிறார் . அதே போல் இந்த வருடமும் ஓய்வுப்பெற்ற காவல் துறை ஆணையர் அலேக்சாண்டர் அவர்கள் , உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் மற்றும் மறுமலர்ச்சி தி மு கழக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினரும் , நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் பொருளாளருமான குட்டி (எ) சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்திரை்களாக வரவழைத்து கெளரவித்தார் . 

இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி தி மு கழகத்தை சேர்ந்த  நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர்  தி மு இராஜேந்திரன் அவர்கள் , மாநில தீர்மானக் குழு செயலாளரும் , தாயகத்தின் கொள்கை பரப்பும் வரகவியுமான கவிஞர் மணி வேந்தன் அவர்கள் மற்றும் சுற்று பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில்  இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மறுமலர்ச்சி கழக சொந்தங்கள் கலந்து கொண்டனர் .

கலிங்கப்பட்டியில்  உள்ள தனது வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா பந்தல் மேடையில்  , தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து வந்த தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் , கழக கண்மணிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியதோடு மட்டுமல்லாமல் , சொந்த உறவுகளை போல் ஊரில் உள்ள அனைத்து தெருவிற்கும் நடந்தே சென்று கிராம மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறினார் . இதேபோல் ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது தலைவர் வைகோ அவர்களுக்கு பழக்கமான வழக்கம் .

நேற்றைய தினம் தனது இல்லத்திற்கு வருகை தந்த குழந்தைகள் உள்ளடக்கிய  அனைத்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் சைவ உணவுகளை வழங்கி , அவர்களோடு அமர்ந்து காலை உணவை தலைவர் வைகோ சாப்பிட்டார் .

உலக பொது மறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் தினமான இன்று மாலை 6 மணிக்கு  தலைவர் வைகோ தலைமையில் கலிங்கப் பட்டி திருவள்ளுவர் கழகம் 16 ஆம் ஆண்டு விழாவாக " தமிழர் தம் பெருமைக்கு பெரிதும் பெருமை சேர்ப்பது காதலா ! வீரமா ! என கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் அவர்கள் நடுவராக பங்கு பெறும் சிறப்பு பட்டி மன்றம் அம்பேத்கர் திடலில் நடைபெறுகிறது .

கலிங்கபட்டியில் நமது குடும்ப தலைவர் வைகோ அவர்களின் தொடர்ந்து நான்கு நாட்கள் பொங்கல் விழாவிற்கான முன்னேற்பாட்டை பார்க்கும் போது மது விலக்கு போராளி வீரத்தாய் மாரியம்மா அவர்கள் விண்ணுலகில் இருந்து " மகனே என்னையும் மிஞ்சி விட்டாய் என்று மனம் குளிர வாழ்த்தி கொண்டிருப்பார் " .விவசாய குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள்! இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.