காவிரி வாரியம் அமைக்கக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுநகரில் தீக்குளித்த வைகோவின் மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பலியாகினார்.

காவிரி பிரச்னைக்காக இந்தத் தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால் அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த போராட்டத்தில் வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் சரவணன் சுரேஷ். இவர் வைகோவுடன் இணைந்து அரசியல் ஈடுபட்டு வந்தார். இவர் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்று வந்துள்ளார்.

இதனையடுத்து திடீரென்று நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் விருதுநகர் விளையாட்டு மைதானத்துக்கு சென்ற அவர் அங்கு யாரும் எதிர்பாராத வகையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.   மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக  மதுரை அப்போலோவில் சேர்க்கப்பட்டார்.

90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டதால் இனி அவர் பிழைப்பது கடினமே என டாக்டர்கள் கூறிவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோவின் தொண்டர் ஒருவர் தீக்குளித்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயம் அடைந்த சரவணன் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.