அதெல்லாம் முடியாது, எல்லாமே ரெடியா இருக்கு, கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்; வைகோவிற்கு எனது வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வருகிற 1-ந் தேதி அரசு விழா நடக்கிறது. 

அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு குமரி மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்துக்கு நல்லது செய்ய வருகை தரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டாம். எனது வேண்டுகோளை வைகோ ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் எனக் கூறினார்.

முல்லை பெரியாறு விவகாரம், நீட் தேர்வு, காவிரி டெல்டா மண்டலத்தை விவசாயத்தை அழிக்க முயற்சி என்று மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. கஜா புயல் விவகாரத்திலும் தமிழகத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்திருக்கிறது. 

எனவே, தொடர்ந்து தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் போது கருப்புக் கொடி காட்டுவோம் அறவழியில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.  

பொன். ராதாகிருஷ்ணன் பழகுவதற்கு இனிமையானவர் ஆனால் கறுப்புக்கொடி காட்டுவதை நிறுத்தமுடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.  இரண்டுமுறை வைகோவிடம் கோரிக்கை வைத்தும் அவர் நிராகரித்துள்ளதால், பொன்னார் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.