தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ம.தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ 

இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ; நான் கடந்த 22 ஆண்டுகளாக பட்ட கஷ்ட்டம் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக கட்சிக்காரர்கள் திருமண நிகழ்ச்சசிகளில் கூட கலந்துகொள்ள முடியாத சூழலில் உள்ளேன். கட்சிக்கு கவுரவம் முக்கியம். 13 ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. பொதுமக்கள் போராட்டத்தை அரசு திட்டமிட்டே அவர்களை சுட்டுக் கொன்றது. நீதி கேட்டு போராடியவர்கள் தீவிரவாதியா? தனது கணவருக்கு சாப்பாடு எடுத்து சென்ற பெண்ணை சுட்டுக் கொன்றது மிக்க கொடுமையானது. 

22 நான் போராடிய காலத்தில் ஒரு வன்முறை சம்பவமும் நடைபெற்றது கிடையாது. கடந்த சில நாட்களாக கவர்னர் ஏன் மீது என்ன வழக்கு போடலாம் என யோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க நான் ரெடி. ஜெயில் வாழ்க்கை எனக்கு தனி சுகமான அனுபவம். 

தொடர்ந்து பேசிய அவர்,  நாடாளுமன்ற தேர்தலின் திமுக தலைமையிலான அணியே வெற்றிபெறும் . முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயில் ரெடியாகிவிட்டது. 20 தொகுதிகளில் வென்று திமுக ஆட்சியை பிடிக்கும்.  நான் கலைஞரிடம் கொடுத்த வாக்குப்படி தளபதி ஸ்டாலினுக்கு துணையாக இருப்பேன். மதிமுக ஆரம்பகால தொண்டனுக்கு எப்போதும் தனிமரியாதை உண்டு என்றார்.