தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் இனி பட்டாசு வெடிக்கக்கூடாது என தன் கட்சித் தொண்டர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்டுப்பாடு விதித்துள்ளார், ஏற்கனவே அவர் தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை மற்றும் மாலை உள்ளிட்டவற்றிற்க்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம் என தெவித்திருந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மதிமுகவின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் ஆர்வமிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறும், தீ விபத்து ஏற்படும் அபாயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் நிகழ்கின்றது.எனவே பட்டாசு வெடிப்பதை கழகத் தோழர்கள் கண்டிப்பாகக் கைவிட வேண்டும். இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகோ தன்னுடைய அரசியில் அணுகுமுறைகளில் அதிரடி காட்டிவரும் நிலையில், அவரின் கட்சித்தொண்டர்களுக்கு அவர் பிறப்பித்து வரும் புதுபுது உத்தரவுகளால்  அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.