மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பை நாடெங்கும் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்க்க , கடுமையாக எதிர்த்து வரும் மக்கள் நலக்கூட்டணியின் அமைப்பாளர் வைகோ திடீரென மோடியை புகழ்ந்துள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு சாதாரண பொதுமக்களை கடுமையாக பாதிக்க தினந்தோறும் துக்கம் , சந்தோஷம் அனைத்தையும் மறந்து பொதுமக்கள் வங்கி வாசலில் தவம் கிடக்கும் காட்சி தினசரி நடக்கும் காட்சி.
ரூபாய் நொட்டுகளை செல்லாதவைகளாக அறிவித்த மோடி அரசு அதற்கு மாற்றாக புழக்கத்துக்கு 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் தாள்களை முறையாக வரைமுறை செய்யாமல் வெளியிட்டதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ரூ.2000 தாளை வைத்து கொண்டு எதுவும் செய்ய முடியாமல் கடும் கோபத்தில் உள்ளனர்.

மறுபுறம் நாளுக்கொரு அரசின் அரவிப்பும், பணத்தை டெபாசிட் செய்வதில் உள்ள கிடுக்கிபிடி அறிவிப்புகளும் சாதாரண மக்களை , சிறுதொழிலை கடுமையாக பாதித்துள்ளது. நாடுமுழுதும் தொழில்கள் அடியோடு முடங்கி போயுள்ளது. இதை எதிர்த்து நாடு முழுதும் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து பொங்கி எழுந்துள்ளனர்.
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரே நடக்காமல் ஸ்தம்பித்துள்ளது. பிரதமர் அவைக்கு வராமல் பயந்து ஓடி ஒழிகிறார் . நாடெங்கும் இடது சாரிகளும், மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளும் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 28 நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதில் திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ இன்று மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க.வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரூபாய் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை வரவேற்பதாகவும், இதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை ம.தி.மு.க. ஆதரிக்கவில்லை என்றும் சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, "நாடெங்கும் பெரிய அளவில் விவாதிக்கப்படும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ம.தி.மு.க. வரவேற்கிறது .

மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு அரசியல்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது . ஆனால் இதற்கான போரட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள்நோட்டுகளை மாற்றி விட முடியாதபடி பிரதமரின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாதாரண மக்களுக்கு எந்த சிரமமும் இல்லை. ஒட்டு மொத்தமாக மோடியின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதை தான் நான் எதிர்கிறேன் . இந்த நடவடிக்கை அடிதட்டு மக்கள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறது. அதனால் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை ம.தி.மு.க. வரவேற்கிறது," என்றார்.
ஆபரேஷன் என்றால் வலி இருக்கத்தான் செய்யும் , மருந்து கசக்கத்தான் செய்யும் ஆனால் நோய் குணமாகும் என்றெல்லாம் பேட்டி கொடுத்த வைகோ ஹாட்ஸ் ஆஃப் மோடி என்று கூறினார்.

மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் உள்ள நிலையில், மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் மோடியின் செல்லாது அறிவிப்பை எதிர்க்கும் நிலையில், வைகோ திடீர் ஆதரவு கொடுத்ததோடு, செல்லாது அறிவிப்புக்கு எதிராக இடதுசாரிகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு எதிராக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தர் பல்டி அடிப்பது ஒன்றும் வைகோ இதற்கு முன்னர் செய்யாத ஒன்று இல்லை என கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர் ஒருவர் , ஆனால் மக்கள் பிரச்சனையில் நாடே கொந்தளித்து கொண்டிருக்கும் போது இவர் அடிக்கும் அந்தர் பல்டி இருக்கே இது தான் அவர் அடித்த அந்தர் பல்டியிலேயே சிறந்தது.
இதற்காக அவர் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறினார். மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் நின்றபோது பிரச்சாரம் என்ற பெயரில் இவர் அடித்த கூத்துகளால் தோல்விக்கும் கிண்டலுக்கும் ஆளானது மக்கள் நலக்கூட்டணி இப்போது மீண்டும் மக்கள் நலக்கூட்டணியை ஒருங்கிணைப்பாளரே உடைக்கிறார் என்று தெரிவித்தார்.
