vaiko is a branded brand of the world We are a big rival for Modi

உலக நாடுகளால் வன்முறையாளர் என்ற முத்திரை குத்தப்பட்டவர் வைகோ என்றும், நாட்டிற்காக பெரும்பணி ஆற்றி வரும் பிரதமர் மோடியை விமர்சிக்க தகுதியற்றவர் எனவும் தமிழசை சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு அதை மறைப்பதற்காக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போலி பிரசாரத்தில் வைகோ தற்போது ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். உலக நாடுகளால் வன்முறையாளர் என்ற முத்திரை குத்தப்பட்டவர் வைகோ என்றும், நாட்டிற்காக பெரும்பணி ஆற்றி வரும் பிரதமர் மோடியை விமர்சிக்க தகுதியற்றவர் எனவும் தமிழசை சாடியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய மதிமுகவினர் மீது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருச்செந்தூர் அருகே பரப்புரை மேற்கொள்ள வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பாரதிய ஜனதாவினர் கல்வீசி தாக்குதல் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பாரதிய ஜனதாவினர் 6 பேர் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் ராமசாமியின் மகள் திருமணத்துக்கு சென்ற வைகோவை, ஆபத்தானவர் என்று கூறி மலேசிய அரசு கைது செய்து, தனி அறையில் வைத்திருந்ததை குறுப்பிட்டு வைகோ ஒரு சர்வதேச நாடுகாளால் முத்திரை குத்தப்பட்ட வன்முறையாளர் என தாறுமாறாக விமர்சித்துள்ளார்.