மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த, 2006-ம் ஆண்டு ம.தி.மு.க.வை உடைக்க, முயற்சி செய்கிறார்' என, மறைந்த கருணாநிதிக்கு எதிராக, அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, வைகோ கடிதம் எழுதினார். இக்கடிதத்தின் அடிப்படையில், தி.மு.க., அரசு சார்பில், வைகோவுக்கு எதிராக, அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, கருணாநிதி முன் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் மற்றும் வைகோ தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே திமுக போட்ட வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு ஒராண்டு சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அபராதத்தை கட்டிய வைகோவின் வழக்கறிஞர்கள் தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கூறி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு ஜாமீன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.