23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக அடியெடுத்து வைத்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை தனது குடும்பத்துடன் திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார் வைகோ. பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்பு பலூன்களை பறக்க விட்டு கோபேக் மோடி என எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் அவர் ராஜ்யசபா மூலம் எம்பியாகி நாடாளுமன்றத்திற்கு சென்ற பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 

வைகோ எம்.பி.யானதை ஏற்றுக்கொள்ளக்ஜ் கூடாது. அவர் மீது தேசதுரோக வழக்கு இருக்கிறது என வெங்கைய்யா நாயுடுவுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார் சுப்ரமணியன் சுவாமி. ஆனால் வைகோ நாடாளுமன்றத்திற்கு சென்றதை அறித்து சுப்ரமணியன் சுவாமி ஓடோடி வந்து அன்பை பறிமானார்.

 

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியையும் வைகோ சந்தித்து பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு பேசிய வைகோ, ‘
’மோடியையும் அவரது அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறேன். இருந்தபோதும் அவர் என்னை அன்போடு வரவேற்றார். அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதாக மோடி கூறினார். அதைப்பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் சில மிக முக்கியமான விஷயங்களையும் விவாதித்தேன். அதைப்பற்றி வெளியில் சொல்ல முடியாது’’ என அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வீட்டுக்கு தனது மகன் வையாபுரி, மனைவி, மருமகள், பேத்தி என குடும்பத்துடன் சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி.யாகி டெல்லி சென்றது முதல் பாஜகவினரை சந்தித்து ரவுண்டு கட்டி வருகிறார் வைகோ.