நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தாங்கள் போட்டியிடும், தொகுதிகள் எண்ணிக்கையை அறிவிக்காமல், காலம் தாழ்த்தி வரும், திமுக மீது, கம்யூனிஸ்டுகள், வைகோ மற்றும் திருமா உள்ளிட்டோர் செம்ம காண்டில் இருக்கிறார்களாம். அதிமுக - திமுக என, மாறி மாறி பேசி, கூட்டணி பேரம் நடத்தி வரும்,விஜயகாந்த்காக, நாங்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டுமா? என நேரடியாகவே கேட்கிறார்களாம்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு, இந்த வாரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், கூட்டணி அமைக்கும் பணியில், அதிமுக - திமுகவும் மும்முரமாக உள்ளன. அதிமுக கூட்டணியில், பிஜேபிக்கு, ஐந்து லோக்சபா தொகுதிகளும், பாமகவுக்கு, ஏழு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா, எம்பி 'சீட்'டும் தரப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சிக்கு, ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜிகே வாசனின், தமாகவுக்கும் தொகுதி ஒதுக்க பேச்சு நடந்து வருகிறது. அதே நேரத்தில், தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க, அதிமுகவும், திமுகவும் பேச்சு நடத்தி வருகின்றன. ஆனால், எந்த கூட்டணியில் இணைவது என அறிவிக்காமல், தேமுதிக இழுத்தடித்து வருகிறது. 

இந்நிலையில், தேமுதிக உயர்நிலை குழு, இன்று கூடும் என, அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் அறிவித்துள்ளார். திமுக, கூட்டணியில், காங்கிரசுக்கு, புதுச்சேரி உட்பட, 10; முஸ்லிம் லீக் கட்சிக்கு, ஒன்று; கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒன்று என, தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாரிவேந்தரின், இந்திய ஜனநாயக கட்சியும், திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, - விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சியும்,திமுகவின் தோழமை கட்சிகளாக உள்ளன. ஏற்கனவே, இந்த கட்சிகளுடன், முதல் கட்ட பேச்சு நடந்துள்ளது; உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட பேச்சு நடத்த அழைப்பு விடுக்காமல், திமுக இழுத்தடித்து வருவதால், தோழமை கட்சிகள் கடுப்படைந்துள்ளன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட பேச்சு நடத்த வரும்படி, விசிகக்களுக்கு, திமுக நேற்று அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை, விசிக, புறக்கணித்தது. எந்த கூட்டணியில் இணைவது என, விஜயகாந்தின், தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை. அதனால், அந்தக் கட்சியுடன், திமுகவும், அதிமுகவும் மாறி மாறி பேசி வருகின்றன. தேமுதிக வந்தால், அந்த கட்சி கேட்கும் இடங்களை ஒதுக்க வேண்டும். அதன் பின், தோழமை கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கலாம், என, திமுக கணக்கு போட்டுள்ளது.

விஜயகாந்த்தின் முடிவுக்காகவே, தோழமை கட்சிகளை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. இதை உணர்ந்த, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோ மற்றும் திருமா உள்ளிட்டோர் எரிச்சல் அடைந்துள்ளன. 'நீண்ட காலம் தோழமையுடன் இருந்ததற்கு, திமுக தரும் பரிசு இது தானா...' என்றும், கொதிப்படைந்துள்ளன.  ஆனால், கடந்த 2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என பிளான் போட்டு B டீம் மக்கள் நல கூட்டணி அமைத்து சதி வேலை செய்ததால் பழி வாங்குகிறதோ என யோசிக்கிறார்களாம்.