vaigaiselvan pressmeet on irattai ilai debate

அனைத்து நிர்வாகிகளும் எங்களுடன் தான் இருக்கின்றனர் எனவும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் எனவும், சசிகலா தரப்பு ஆதரவாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைதேர்தலில் சசிகலா தரப்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வேட்பாளராக நிறுத்தபடுகிறார்.

ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனன் நிறுத்தப்படுகிறார். இதனிடையே அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் பலத்த போட்டி நிலவி வருகிறது.

இதுகுறித்து இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். தேர்தல் ஆணையம் இருதரப்பையும் இன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து இருதரப்பினர் சார்பில் வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் பல வாதங்களை முன்வைத்து வந்தனர்.

தற்போது இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சசிகலா தரப்பு ஆதரவாளர் வைகை செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான்.அனைத்து நிர்வாகிகளும் எங்கள் பக்கம் இருப்பதால் எங்களுக்கு தான் ஒதுக்கப்படும்.

ஒ.பன்னீர்செல்வத்தின் சதியை உடைப்போம்.பன்னீர்செல்வம் தரப்பில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலையே நல்ல செய்தி வரும். எதிரிகளின் கனவு பலிக்காது.யாரையும் மிரட்டித்தான் அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை.

ஒ.பி.எஸ் தரப்பினர் பொய்யான குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.