Asianet News TamilAsianet News Tamil

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம்…அதிரடியாக குற்றம்சாட்டும் வைகை செல்வன்…

vaigai selvan press meet
vaigai selvan-press-meet
Author
First Published Mar 23, 2017, 7:21 AM IST


இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம்…அதிரடியாக குற்றம்சாட்டும் வைகை செல்வன்…

இந்திய தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம் என்றும் கடந்த சில நாட்களாக அக்கட்சியின் தமிழக தலைவர்களின் பேச்சுக்கள் இதை உறுதி செய்வதாக உள்ளது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆர்,கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் இரு அணியினரும் போட்டியிடுவதால் தங்களுக்கே இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியதோடு, கட்சியின் பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போன அதிமுகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். அதே நேரத்தில் சின்னம் முடக்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய வைகை செல்வன், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம் என வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

இப்பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பாஜக  தலைவர்கள் தமிழிசை, எச்.ராஜா போன்றவர்கள் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என தொடர்ந்து மீடியாக்களில் பேசி வருவதாக தெரிவித்த வைகை செல்வன், இதற்கு முழுக்க முழுக்க காரணம் என  வைகை செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios