Vaidyalingam MP hoped that the verdict of the Election Commission would be in favor of them
தங்கள் அணி தரப்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியினர் மனு தாக்கல் செய்தாலும், தங்களுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வரும் என்றும் வைத்தியலிங்கம் எம்.பி நம்பிக்கை தெரிவித்தார்
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சி தீவிரம் அடைந்தது.
டி.டி.வி. தினகரன் அணி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. சென்னையில் கடந்த 12-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா நியமனம் ரத்து, தினகரன் துணை பொதுச் செயலாளராக நியமனம் ஆகியவை செல்லாது என்பது உள்பட அந்த பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கும்படி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம் எம்.பி, அதிமுக பொதுக்குழுவில் 98 சதவிகிதம் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதாகவும், அவர்கள் அனைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அங்கீகாரம் செய்யப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
தங்கள் அணி தரப்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியினர் மனு தாக்கல் செய்தாலும், தங்களுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
