தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 18-வது வார்டு குரும்பக்குளம் பகுதியில் சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின்கீழ் வாட்டர் ஏடிஎம் என்னும் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

இதில் கலநது கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர்  அண்ணாதுரை 'இந்த வாட்டர் ஏடிஎம் என்னும் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் முதலாவதாக செயல்படுத்தப்படுகிறது. இதை பொதுமக்கள் முறையாக பாதுகாக்க வேண்டும்' என்றார். 

இதையடுத்து, தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்து  பேசியானார். இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் பேசும்போது, ''நீரின்றி அமையாது உலகு என்று சொன்னார் அவ்வையார்'' என்று கூறிவிட்டு, மேடையிலிருந்த கலெக்டர் அண்ணாதுரையை பார்த்து சரியா? தவறா? என்று கேட்டார். உடனே கலெக்டரும் சரிதான் என கூறி சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினார். 

இதைக்கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் 
வான் இன்று அமையாது ஒழுக்கு என்று பாடிய திருவள்ளூரை அவர்கள் வசதியாக மறந்து விட்டார்க்.

ஏற்கனவே, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று முதலலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு முறை பொது மேடையில் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார்.  தற்போது, திருவள்ளூவர் சொன்னதை அவ்வையார் சொன்னதாக  பேசி பொது மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் வைத்திலிங்கம் எம்.பி..

அதே நேரத்தில் எம்.பி.யின் பேச்சுக்கு மாவட்ட ஆட்சியரும் ஆமாம் போட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..அதிமுக அமைச்சர்களும், எம்.பி.க்களும் மேடைகளில் இது போன்று  பேசுவது வாடிக்கையாகிவிட்டது.