பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் ஸ்டாலின்…தாக்குதல் சம்பவம் குறித்து வைகோ குற்றச்சாட்டு…
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திப்பதற்காக வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கார் மீது திமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் கருணாநிதியைச் சந்திக்காமலேயே வைகோ திரும்பச் செனறார்.

இந்த சம்பவம் குறித்து மதிமுக அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தன் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். காவேரி மருத்துவமனைக்கு தான் வருவது தெரிந்து முன்கூட்டியே 50 க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்துவதற்காக குவிக்கப்பட்டனர் என வைகோ குற்றம்சாட்டினார்.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின் இருப்பதாக மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
ஆனால் இந்த தாக்குதலுக்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவித்திருப்பது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் உள்ளது என சைகோ தெரிவித்தார்.
