Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவுக்கு மொத்தமாக சமாதி.. தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரம்.

தமிழகத்திற்கு நேற்று வந்த 2,21,090 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளையும் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னைக்கு மட்டும் 62050 கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.  

Vaccine distribution to district's  .. Government of Tamil Nadu is serious about vaccination.
Author
Chennai, First Published Jun 23, 2021, 9:59 AM IST

தமிழகத்திற்கு நேற்று வந்த 2,21,090 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளையும் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னைக்கு மட்டும் 62050 கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு , பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 74210 கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. 

Vaccine distribution to district's  .. Government of Tamil Nadu is serious about vaccination.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 43520 கோவாக்சின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 31040 கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 18240 கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

Vaccine distribution to district's  .. Government of Tamil Nadu is serious about vaccination.

மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, விருதுநகர், சிவகாசி ஆகிய மாவட்டங்களுக்கு 14080 டோஸ் தடுப்பூசி மற்றும்  திருச்சிராப்பள்ளி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 9920 டோஸ் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு 2,12,090 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios