Asianet News TamilAsianet News Tamil

மூன்றாவது அலைக்கு முன் அனைவருக்கும் தடுப்பூசி..?? புனேவில் இருந்து சென்னை வந்த 3,60,130 கோவீஷீல்ட்.

புனேவில் இருந்து 3 லட்சத்து  60 ஆயிரத்து 130 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் நேற்று சென்னை வந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று சற்று குறையத்தொடங்கியுள்ளது. 

Vaccinate everyone before the third wave .. ?? 3,60,130 covishields from Pune to Chennai.
Author
Chennai, First Published Jun 25, 2021, 9:41 AM IST

புனேவில் இருந்து 3 லட்சத்து  60 ஆயிரத்து 130 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் நேற்று சென்னை வந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று சற்று குறையத்தொடங்கியுள்ளது. இந்தாண்டு இறுதியில் 3வது அலை தாக்கும் என அஞ்சப்படுகிறது எனவே அதிலிருந்து தற்காத்துக்கொள்ள,  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

Vaccinate everyone before the third wave .. ?? 3,60,130 covishields from Pune to Chennai.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திற்கு போதுமான அளவில் தடுப்பூசி கிடைக்காததால் தொடர்ந்து தட்டுபாடு ஏற்ப்பட்டன. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தன் அடிப்படையில்,  புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 31 பார்சல்களில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரத்து 130 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

Vaccinate everyone before the third wave .. ?? 3,60,130 covishields from Pune to Chennai.

இதில் தமிழக அரசுக்கு 27 பார்சல்களில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 130 கோவீஷீல்ட் தடுப்பூசிகளை  சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து  சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். அதேபோல் மத்திய தொகுப்பிலிருந்து வந்த நான்கு பார்சல்களில்   48 ஆயிரம் கோவீஷீல்ட் தடுப்பூசிகளை சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்க்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடதக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios