திமுகவிலிருந்து என்னை நீக்கிடுங்க... இன்று பாஜகவில் இணையவும் வி.பி.துரைசாமி அதிரடி முடிவு!

கருணாநிதி அழைத்துதான் 2001-ல் மீண்டும் திமுகவுக்கு வந்தேன். 2006-ல் என்னை துணை சபாநாயகர் ஆக்கி அழகுபார்த்தார் கருணாநிதி. அப்போது தலைவருக்கு விசுவாசமாக இருந்த நான், இப்போது விசுவாசமாக இல்லையா? கட்சிப் பதவி பறிப்பு எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான். திமுகவின் அடிமட்ட தொண்டர் பொறுப்பிலிருந்தும் என்னை நீக்குமாறு கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். 

V.P.Duraisamy joins bjp today

திமுகவில் கட்சிப் பதவி பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி, இன்று காலை பாஜக தலைவரை சந்தித்து  அக்கட்சியில் இணையப்போவதாக அறிவித்துள்ளார்.V.P.Duraisamy joins bjp today
திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதனால், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து இன்று விளக்கம் அளித்த வி.பி.துரைசாமி, “தமிழக பாஜக தலைவர் முருகனும், நானும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் அவருக்கு வாழ்த்து சொல்லத்தான் சந்தித்தேன். இது அரசியல் ரீதியிலான சந்திப்பே இல்லை. பிராமணர் கட்சியில் அருந்ததியருக்கு தலைவர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வாழ்த்தப்போனால் என்ன தவறு?” என்று கூறியிருந்தார்.V.P.Duraisamy joins bjp today
எல்.முருகனுடனான சந்திப்பால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விளக்கம் இன்னும் கோபத்தை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமியை நீக்கி மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவருக்குப்  பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தும் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

V.P.Duraisamy joins bjp today
இந்நிலையில் பாஜகவில் இணையபோவதாக வி.பி.துரைசாமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கருணாநிதி அழைத்துதான் 2001-ல் மீண்டும் திமுகவுக்கு வந்தேன். 2006-ல் என்னை துணை சபாநாயகர் ஆக்கி அழகுபார்த்தார் கருணாநிதி. அப்போது தலைவருக்கு விசுவாசமாக இருந்த நான், இப்போது விசுவாசமாக இல்லையா? கட்சிப் பதவி பறிப்பு எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான். திமுகவின் அடிமட்ட தொண்டர் பொறுப்பிலிருந்தும் என்னை நீக்குமாறு கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். இன்று காலை பாஜகவில் முறைப்படி இணைகிறேன்” என்று வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios