டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு  காற்று மாசுபட்டு ஏற்பட்டிருப்பதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சதி காரணமாக இருக்கலாம் என உத்தரப் பிரதேச பாஜக தலைவர் அமித் அகர்வால் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  எப்போதும் இல்லாத அளவிற்கு டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சனை இந்தாண்டு அதிகமாக உள்ளது. காற்று  மாசுபாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  டெல்லி காற்று மாசுபாட்டுக்கு பாகிஸ்தான் சீனா காரணமாக இருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் கருத்து கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு  நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.   இது குறித்து பேசியுள்ள அவர்,  இரு அண்டை நாடுகளில் ஒன்று தான் இதற்கு காரணமாக இருக்க முடியும்,   இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் பாகிஸ்தான் சீனா இந்தியாவில் விஷ வாயுக்களை பரப்பி இருக்கலாம் பாகிஸ்தான் ஏதேனும் விஷ வாயுவை வெளியேற்றி உள்ளதா என்பதை நான் தீவிரமாக கவனிக்க வேண்டும்.  பிரதமர் மோடி,  அமித் ஷா , ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால்தான் பாகிஸ்தான் இப்படி நடந்துகொள்கிறது .  இந்தியாவை எதிர்த்து வெற்றி பெற முடியாது பாகிஸ்தான், நாட்டுக்கு எதிராக பல்வேறு சதிகளைசெய்துவருகிறது.

டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு குண்டுவெடிப்பு மற்றும் தொழிற்சாலைகளின் இருந்து வெளியாகும்  நச்சு வாயுக்கள்  காரணமென முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார், மோடியும் அமித் ஷாவும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்க்க வல்லவர்கள்.  மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணரைப்போன்று  மோடியும் , அதில் வரும் அர்ஜுனனைப் போன்று , அமித்ஷாவும் உள்ளதால் இந்த விஷயத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் . யாரும் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என அவர் தெரிவித்தார்.  அவரின் இந்த பேச்சு நகைப்பையும் பலரை தலையில் அடித்துக் கொள்ளவும் வைத்துள்ளது.