Asianet News TamilAsianet News Tamil

தப்புத்தப்பா இறப்பு டேட்டா... அசிங்கப்பட்ட உதயநிதி..!

கொரோனாவால் தமிழகத்தி 43 மருத்துவர்கள் இறந்து விட்டதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட போலியான தகவலால்  வருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 
 

Uthayanidhi disgraced by misleading data
Author
Tamil Nadu, First Published Aug 4, 2020, 3:49 PM IST

கொரோனாவால் தமிழகத்தி 43 மருத்துவர்கள் இறந்து விட்டதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட போலியான தகவலால்  வருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

 Uthayanidhi disgraced by misleading data

இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும்! எனக்கூறி கொரோனா தொற்று பரவி இந்தியாவில் இறந்தவர்களின் பட்டியலை மாநில வாரியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் உதயநிதி. அதில் 18 மாவட்டங்களில் 175 மருத்துவர்கள் பலியானதாகவும், தமிழகத்தில் மட்டும் 43 மருத்துவர்கள் பலியான தகவலையும் உதயநிதி பகிர்ந்து இருந்தார். 

 

ஆனால் அந்த தகவல் அதிகாரப்பூர்வமற்றது எனத் தெரிய வந்துள்ளது. மருத்துவர்களின் மரணத்தில் பொய் சொல்லி மக்களின் உயிரோடு விளையாடுவது கிரிமினல்குற்றம். போலி டேட்டா கொடுத்து மருத்துவர்களுக்கு அச்சம் ஊட்டி பணி இடையூறு செய்வது கொலைபாதகம் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி வெளியிட்ட டேட்டா குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், கொரோனாவால் 43 மருத்துவர்கள் பலியானதாக வெளியான தகவல் அதிகாரப்பூர்வமற்றது. அப்படி யாரும் இறக்கவில்லை. இந்த செய்தியை அடியோடு மறுக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர். உதயநிதியின் இந்த ட்விட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios