Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானை எகிறி அடித்த இந்தியா-அமெரிக்கா..!! துள்ளி குதித்து குறுக்கே நின்ற சீனா..!!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுகிறது. பயங்கரவாதத்தை எதிர்க்க மிகப்பெரிய முயற்சிகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் முயற்சிகளை சர்வதேச சமூகம் அங்கீகரித்து அதை மதிக்க வேண்டும்.

US India angry against Pakistan,  China leaps and bounds
Author
Chennai, First Published Sep 12, 2020, 5:12 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தியுள்ள நிலையில்,  பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உறுதியாக எதிர்த்து  போராடி வருகிறது எனவும், அதன் முயற்சிகளை சர்வதேச நாடுகள் மதிக்க வேண்டும் எனவும் சீனா கருத்து தெரிவித்துள்ளது.  இந்தியாவும்  அமெரிக்காவும் பாகிஸ்தானை எச்சரித்துள்ள நிலையில்,  சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு கூறியுள்ளது. 

மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் உடனடியாக மற்றும் தொடர்ச்சியான, மீள முடியாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் இஸ்லாமாபாத்தில் இருந்தவாறு மும்பை தாக்குதல் உள்ளிட்ட பிற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் மீது விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் இந்தியா, அமெரிக்க ஆகிய இருநாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

 US India angry against Pakistan,  China leaps and bounds

இந்திய அமெரிக்க பயங்கரவாத கூட்டு நடவடிக்கை குழுவின் 17வது கூட்டம், காணொலி காட்சி வாயிலாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதில் இந்திய-அமெரிக்க பதவி உரையாடல் மூன்றாவது அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயங்கரவாத எதிர்ப்பு இணைச் செயலாளர் மகாவீர் சிங்வியும், அதேபோல் அமெரிக்க வெளியுறவுத் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளருமான நாதன் ஏ. சேல்ஸ் ஆகியோர் உரையாடினார். அக்கூட்டத்திற்கு பின்னர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மறைமுகமாக உபயோகிப்பது குற்றம் எனவும், எனவே பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உடனடியாக, உறுதியான மற்றும் மீளமுடியாத நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இருதரப்பினரும் அடிக்கோடிட்டு கட்டினர். 

US India angry against Pakistan,  China leaps and bounds

மும்பை தாக்குதல் மற்றும் பதான்கோட் விமானப் படைத்தளத்தின் மீதான தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் மீது விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். அதேபோல் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கும் அதன் அரசாங்கத்திற்கும் அமெரிக்கத் தரப்பு ஆதரவு அளிக்கும் எனவும், அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  மேலும் இரு தரப்பும் இணைந்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் எந்த வடிவத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் அரங்கேறினாலும் அதை இந்தோ-அமெரிக்கா பயங்கரவாத கூட்டு நடவடிக்கை குழு கடுமையாக எதிர்க்கிறது. ஐநா மன்றத்தால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள அல்கொய்தா ஐ.எஸ்.ஐ.எஸ் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தியுள்ளன. 

US India angry against Pakistan,  China leaps and bounds

அதேபோல் அனைத்து விதமான பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக பாகிஸ்தான் தேவையான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க வேண்டும். ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத  நெட்வொர்க்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை, இம்ரான்கான் அரசு எடுக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்காவும் இந்தியாவும்  வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சவால், அதேநேரத்தில் இதை சமாளிக்க பாகிஸ்தான் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுகிறது. பயங்கரவாதத்தை எதிர்க்க மிகப்பெரிய முயற்சிகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் முயற்சிகளை சர்வதேச சமூகம் அங்கீகரித்து அதை மதிக்க வேண்டும். சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரானது என சீனா தெரிவித்துள்ளது. அதாவது பாகிஸ்தானை அமெரிக்காவும் இந்தியாவும் நிர்ப்பந்தித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா அக்கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios