Asianet News TamilAsianet News Tamil

நகர்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக - பாஜக கூட்டணி இடபங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி..???

அவர்கள் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசிவிட்டு முடிவெடுப்பார்கள் என கூறினார். மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என கூறிய அவர், அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

 

Urban local body elections AIADMK-BJP alliance talks in deadlocked.??
Author
Chennai, First Published Jan 29, 2022, 5:50 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,ஜெயக்குமார்,அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், பாஜக சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர் பொன்.ராதாகிரு ஷ்ணன்,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னாள் மாநில தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சரியாக மதியம் 12.40 மணிக்கு துவங்கிய கூட்டணி பேச்சு வார்த்தை மாலை 4 மணி வரை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும், எங்களுக்கு எந்தெந்த இடங்கள் வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம், அவர்கள் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசிவிட்டு முடிவெடுப்பார்கள் என கூறினார்.மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என கூறிய அவர், அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.

Urban local body elections AIADMK-BJP alliance talks in deadlocked.??

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சிறந்த எதிர்கட்சியாக செயல்பட்டு வருவதோடு, திமுகவின் தவறுகளையும் மக்களின் பிரச்சனைகளையும் தொடர்ச்சியாக அதிமுக மக்கள் மன்றத்தில் பேசி வருவதாகவும், நகர்புறங்களில் பாஜக வலுவாக உள்ளது என்றும், பேச்சு வார்த்தை சுமுகமாகவே நடைபெற்றதாகவும் கூறினார். தமிழக ஆளுநர் குறித்து முரசொலி கட்டுரைக்கு பதில் அளித்த அவர், தமிழக அரசை பாராட்டி பலமுறை ஆளுநர் பேசியுள்ளார் அப்போதெல்லாம் விமர்சிக்காத நபர்கள் தற்போது பேசியுள்ளதை கண்டிப்பதாக தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகவும்,எந்தெந்த இடங்களை வழங்குவது குறித்து தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும், Offer என்பது அவர்களின் கடமை accept என்பது எங்களின் கடமை எனவும் கூறினார்.

Urban local body elections AIADMK-BJP alliance talks in deadlocked.??

மேலும், RBI அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை அளிக்காமல் இருந்தது கண்டிக்கத்தக்கது என கூறிய அவர், அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் குறித்த முரசொலி கட்டுரைக்கு, திமுகவுக்கு இரட்டை நாக்கு என்றும் அவர்களுக்கு ஏற்றது போல் ஆளுநர் ஒத்துவராவிட்டால் பச்சோந்தி போல் விமர்சனம் செய்வார்கள்,முரசொலியை திமுக காரர்களே படிக்கமாட்டார்கள் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார் என குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios