பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சித்தி என்ற தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி. கடந்த ஆண்டு இறுதியில் இவரும் பிரபல நடிகர் ஜெயபிரகாஷ் அவர்களும் இணைந்து நடிக்க தொடங்கிய வெப் சீரிஸ் தான் காட் மேன். அண்மையில் இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியது. வெளியான அந்த ட்ரைலரில் தனிப்பட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டது. 

 இந்த தொடருக்கு எதிர்ப்புகள் பல எழுந்த நிலையில் இந்த இணைய தொடரின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது 5க்கும் அதிகமான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூன் மாதம் 12ம் தேதி வெளியாக காத்திருந்த இந்த இணைய தொடரும் மறுதேதி குறிப்பிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பாஜகவின் மாநில செயலாளர் ஹெச்.ராஜா இந்த நிகழ்வு குறித்து தற்போது ட்வீட் செய்திருக்கிறார்.. அந்த பதிவில் "காட்மேன் பட இயக்குனர், தயாரிப்பாளருக்கு 3 ம் தேதியே விசாரணைக்கு ஆஜராகக் கோரியும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு மீண்டும் 6 ம்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் போன்ற அநாகரீகமான நபர்கள் சட்டத்தை மதிக்க மாட்டார்கள்.