விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...  "நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு யுத்ததை நடத்துகிறது..., அதற்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், பல அடக்குமுறைகளை கடந்தும் விவசாயிகள் போராடியதால் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு செல்லும் இந்த முயற்சியை முறியடிக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.மேலும், மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த முடியாது என மத்திய அரசின் நிர்பந்தத்தின் மூலம் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும். இது இடஒதுக்கீடு என்பதை முழுமையாக இல்லாமல் செய்யும் முயற்சி என்றும் கூறினார்.